பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நினைவுக் குமிழிகள்.2

முன்னைய பிறப்பு நாய்ப்பிறப்பு என்று சோதிடர்சொன்னது சரியாய்ப் போய்விட்டது. இப்படி ஒரு நாயைக் கட்டிக் கொண்டது என் தலை எழுத்து' என்று வருந்தினாள். அன்று முதல் கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்த்தனர்; என்றுமே ஒன்று சேரவில்லை. இஃது ஒரு கதை; ஆனால் இத்தகைய கதையைப் போன்ற நிகழ்ச்சி என் மனைவியின் பிறந்த வீட்டில் நிகழ்ந்தது. இதனை அடுத்த குமிழியில் விளக்குவேன். . . . :

சோதிட ஆராய்ச்சி நடைபெற்றபோது என் சாதகக் குறிப்பு தரப்பெற்றதாம். இதன்படி (1) எனக்கு மக்கட் பேறு இல்லை, (2) எனக்கு முப்பத்தெட்டு வயதில் ஆயுள் முடிகின்றது, (3) இரண்டாவது திருமணம் இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று சோதிடரைச் சொல்ல வைத்தார்கள். அடுத்து என் மனைவியின் சாதகக் குறிப்பைத் தந்து (1) இந்தச் சாதக ருக்குப் புத்திரப் பேறு இல்லை (2) இன்னும் பதினைந்து ஆண்டுகளில் (ஆராய்ந்த ஆண்டு 1943) கைம்பெண் நிலை தென்படுகின்றது என்று சொல்லி வைத்தார்கள். பல சோதிடர்களைக் கொண்டு இந்தப் போக்கிலேயே சொல்ல வைத்தார்கள். சோதிடப் பைத்தியருக்கு இது போதாதா என்ன? என் மைத்துனர் இவற்றை முற்றிலும் நம்பிவிட்டார்; அவரது பெற்றோர்களையும் நம்ப வைத்துவிட்டார். என் மைத்துனர் இரண்டாவது திருமணம் ஆகி ஓராண்டிற்குமேல் உறவு தொடர்ந்திருந்ததால், பேச்சு வாக்கில் இக்கருத்து களை சிறிது சிறிதாக உதிர்த்தார். .

கிறிஸ்துமஸ் விடுமுறை என நினைக்கின்றேன்; டிசம்பர். சனவரி விடுமுறையில் (1943) என் மனைவியின் வற்புறுத்த வின்பேரில் பொட்டணம் சென்றோம். நாங்கள் சென்ற போது சுப்பிரமணியமும் அங்கு வந்தார். நாங்கள் தங்கி