பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

(பக். 194) அவர்பட்ட தொல்லைகளை நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவனவாகும்.

ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் வெற்றி பெற வேகமாக ஒடினால் மட்டும் போதாது; ஒட்டத்தைக் காலத்தே (குறிப்பிட்ட நேரத்தில்) தொடங்க வேண்டும் எனக் கூறுவர். அவ்வடிப்படையில் பேராசிரியர் அவர்கள் முன்னேற்றங் கருதித் தாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் காலத்தே திட்டமிட்டுத் தொடங்கியுள்ள தனை அறிகின்றோம். பொதுவாக ஆசிரியர்கள் சிறந்த நிருவாகிகளாக இருப்பதில்லை; நிருவாகிகள் சிறந்த ஆசிரியர்களாக இருப்பதில்லை. இஃது உலகியலில் நாம் காணும் நடைமுறையாகும். ஆனால் நம்முடைய பேராசிரியர் அவர்கள் சிறந்த ஆசிரியராகவும். சிறந்த நிருவாகியாகவும் விளங்குகின்றார்கள். பள்ளி ஆசிரியர்கள் நியமனம் (பக். 8.9), பள்ளிக் கணக்கு வைப்பு முறை (பக். 19.24), பள்ளிப் பணத்தை முறையாக வங்கியில் செலுத்தல் (பக். 27), மாணவர்களிடமிருந்து கட்டணம் தண்டலுக்கான ஏற்பாடு, மேலிடங்களிலிருந்த வரும் கடிதங்களுக்கு மறுமொழி அனுப்புதல் (பக். 31), வகுப்புகளுக்கு இடவசதி செய்தல் (பக். 36). பள்ளி நூலக மேம்பாடு (பக். 38) கற்பிப்பு சாதனங் கள் (Educational Aids) வாங்குதல், வகுப்புகளுக்குத் தேவை யான அறைகளை வசதி செய்தல். நான்காம் படிவம் தொடங்கத் தக்கவர் துணைகொண்டு விண்ணப்பம் தயாரித் தல் (பக் 44-45), வைரிசெட்டிப் பாளையம் குடிமைப் பயிற்சி முகாம் (பக். 244-255) ஆகியன பேராசிரியர் அவர் களின் தேர்ந்த நிருவாகத் திறனை எடுத்துக் கூறுவனவாகும்.

பேராசிரியர் அவர்களுக்குச் சிறுவயதில்பெற்றோர் இட்ட ‘சுப்புரெட்டி' எனும் பெயர், உயர்நிலைத் தொடக்கப் பள்ளி யில் சுப்பு என ஆகி துறையூரில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலை சுப்புரெட்டியார்’ என மாற்றம் பெற்ற தனை அறிகின்றோம் (பக். 9-11). ரெட்டி’ எனும் சாதிப் பின்னொட்டினை முதலில் வெட்டிக் கொண்டு பின்னர், "ரெட்டியார்’ எனும் பின்னொட்டினைப் பேராசிரியர் அவர்கள் தம் பெயருடன் ஒட்டிக் கொண்டது சாதிப்பற்றின் காரணமாக இல்லை என்பது தெளிவாகும். பேராசிரியர் அவர்கள் எக்காலத்தும் சாதி சமய வெறி சற்று மில்லாத" வராக இருந்து வந்துள்ளார் (பக். 154}. எனவே தமிழுலகில், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டாக்டர்.