பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் பல்வேறு வடிவங்கள் 97

இருந்தன. நான் துறையூரில் புதுக்குடும்பம் வைப்பதற்கு இரண்டு மூன்று மாதங்கட்கு முன்னர்தான் இந்தப் புரோ நோட்டுகள் ஏற்பட்டன.

இந்த மூவரும் நான் பொட்டணத்திலிருந்தபோது பொட்டணம் வந்து இத்தொகைகளைக் கடனாகப் பெற்றுக் கொண்டு சென்றனர். என் மனைவிக்குத் சீதனமாகச் சேர வேண்டிய ரூ.10,000/-இல் ரூ. 5,000/-தன் தாய் பேரில் இருக் கட்டும்; தாய்க்குப் பிறகு இது மகளுக்குத் தானே சேரும் என்று கருதி இந்த ஏற்பாடு செய்யப்பெற்றது. இந்த மூன்று புரோ நோட்டுகளும் என் மைத்துனர் கைவசம் இருந்தன. இவற்றைப்பற்றி என் மைத்துனரும் பேசவில்லை; என் மனைவியும் பேச்செடுக்கவில்லை. "ஜமீந்தாரிடம் இருக்கும் பணம் தம் கையசத்தது” என்று எண்ணிக்கொண்டு வாளா இருந்துவிட்டார்கள் போலும்! என் மைத்துனரின் 'கபட நாடகத்தை அப்போது நான் புரிந்து கொள்ளவில்லை. "இதில் சூழ்ச்சி ஏதோ இருக்கின்றது என்பது மட்டிலும் எனக்குத் தெரிந்தது. இருந்தும் நான் இதைப் பற்றி ஒன்றும் பேசாது வாய்மூடி மெளனமானேன்.

எங்கள் திருமணத்திற்குமுன் (1936க்கு முன்)'ஏதோ ஒரு குடும்பத்தில் கொடுத்த ஒரு கடனுக்கு ரூ 1000/-க்கு ஒரு புன்செய் காடு (சுமார் பதினாறு ஏக்கர்) என் மனைவியின் பேருக்கு ஏலம் எடுத்து வைத்திருந்தார்கள் என் மாமனார் வீட்டார். அஃது அந்தச் சமயம் (1943) ரூ. 5000/-க்குமதிப்பு இருந்தது. இதை மனத்தில் எண்ணிக் கொண்டு ரூ. 5000/-க்குப் புரோ நோட்டுகளும் ரூ 5000/- மதிப்புள்ள காடும் தன் தங்கைக்கு ரூ 10000/-க்கு ஈடுசெய்யப் பெற்று விட்டது என்று என் மைத்துனர் கருதியிருக்கலாம் என்று என் மனத்திற்குப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை (1989) வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

நி-7