பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நினைவுக் குமிழிகள்-2

வில் சிக்கிக் கொள்வது போலவும் என் மைத்துனர் மாமனார் வழக்குகள் பற்றிக் கூறிய கதைகளால் மயங்கி விட்டார். இந்த மயக்கம் பரம்பரையாக-மூன்று நான்கு தலைமுறைகளில் திரட்டிய செல்வம்-ஒரு தலைமுறைக்கும் குறைவான காலத்தில் அழிந்தொழிந்தது.

  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பார்கள். இராமாயணத்தில் கூனியும், மகாபாரதத்தில் சகுனியும் முறையே கைகேயியின் மனத்தையும், துரியோதனனின் மனத்தையும் நேர்முறையில் அறவுரை கூறிக் கெடுத்தார்கள் கைகேயி கேட்காமலேயே மந்தரை அறவுரை வழங்கினாள்: துரியோதனன் பொறாமையினால் தனக்கு நேரிட்ட துன்பங் களைச் சொன்ன் பிறகுதான் சகுனி தலையிடுகின்றான். இங்கு என் மைத்துனரின் உளப்பாங்கையும் மனப்போக்கை யும் நன்கறிந்த சுப்பிரமணியம் நேரடியாக எந்த அறிவுரை களையும் வழங்குவதில்லை. தாம் கேட்ட வழக்குகளையும் நேரில் கண்ட வழக்குகளையும் கதைகள் போல் சோடித்து வழங்குவார். அவற்றில் தம் கைங்கரியம் ஏதாவது இருந்தால் அதைப் பெருக்கிக் காட்டுவார். இவை யெல்லாம் ஓமியோபதிக் குளிகைகள்போல் என் மைத்துன ருக்கு மிக இனிப்பாக இருக்கும். தவிர, இவை சிறந்த கருத் தேற்றங்களாக (Suggestions) அமைந்து அவர் மனத்தைச் சிந்திக்கவும் செய்யும்; செயலில் இறங்கவும் செய்யும். சொல்லுவோர்மீது அதிக நம்பிக்கையும் பற்றும் பாசமும் வைத்திருந்தால், கருத்தேற்றங்கள் அற்புதமாகச் செயற்படும் என்பது எல்லோரும் நன்கறிந்த ஓர் உளவியல் உண்மை.

நல்ல எண்ணத்தோடு பல நல்ல வழக்குரைஞர்களோடு கலந்தாலோசித்து சொத்து அழியக் கூடாதென்று சிறந்த முறையில் தயாரித்த இறுதி விருப்ப ஆவணத்தை (will) சுப்பிரமணியத்தின் கருத்தேற்றங்கள் ஒரு நொடியில் சிதைந்