பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நினைவுக் குமிழிகள்-2

என்று'யாக்கை "நிலையாமையையும் கூறுவார் வள்ளுவப் பெருந்தகை இரண்டாவது குறள் அறிவில்லாதாரின் இயல்பின்மேல் வைத்துக் கூறப்பெற்றுள்ளது. பலவாய நினைவுகள் இன்னவை என்பதை, 'பொ றிகளால்:நுகரப் படும் இன்பங்கள் தமக்குரியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரணமாமாறும், அது தமது முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமற் காக்குமாறும், அதனான் நட்டாரையாக்கு மாறும், நள்ளாரை யழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின’’’ என்று விளக்குவர் பரிமேலழகர். இந்தப் பலவாய நினைவுகளை ஒளவைப் பாட்டியும்

'உண்பது நாழி;

உடுப்பது நான்குமுழம் எண்பது கோடி

நினைந்தெண்ணுவன."

என்று விளக்குவர். இவ்வாறுதான் தம் மருமகள் வீட்டுச் செல்வத்தை நுகரலாம் என்று சுப்பிரமணியம் கருதினாரா என்று என்மனம் அப்போது எண்ணாவிட்டாலும் இப்போது சிந்திக்கின்றது, இதனால்தான் அடியிற்கண்ட அடாத செயல்களில் வெள்ளைமணமுள்ள என் மைத்துனரை இறங்கச் செய்தார். சுப்பிரமணியம் நேரடியாக எதையும் சொல்வதில்லை; குறிப்பாகத்தான் சொல்வார். சொத்து விவகாரமான விஷயமாதலால் அக்குறிப்பு என் மைத்துனர் உள்ளத்தில் விதை நடுவதுபோல் பக்குவமாக அமையும். அஃது அங்குரித்து சிறு செடியாகி சில நாட்களில் பெரிய மரமாகவே வளர்ந்துவிடும், பிறகு என் மைத்துனர் தாமே

4. குறள்-337 இன் உரை. 5. நல்வழி-28 -