பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் படிவம்-சென்னைப் பயணம் - 107

மிட்டுச் சென்னைப் பயணத்திற்கு ஆயத்தமானேன். ரு 60/தாளாளரிடம் பெற்றுச் சென்னைசென்றேன்; மயிலாப்பூரில் பன்மொழிப் புலவர் இல்லத்தில் தங்கி நடவடிக்கைகளைக் கவனித்தேன். சென்னை செல்லுவதற்குமுன் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறையின்கீழ் உள்ள உயர்நிலைப் பள்ளிகளைக் கவனிக்கும் பகுதியின் தலைவர். வி.எஸ், இராமச்சந்திர அய்யருக்கு என் குருநாதர் திரு. கே. இராமச்சந்திாஅய்யரிடமிருந்து (தலைமையாசிரியர், கழக உயர்நிலைப்பள்ளி, குளித்தலை) ஒரு பரிந்துரைக் கடிதத்தை எய்ப்பினில் வைப்பாக இருக்கட்டும்' GrరF வாங்கி வைத்துக் கொண்டிருத்தேன். :

சி. சிங்காரவேலு முதலியார் ைச த ப் பே ட் ைட மாவட்டக் கல்வி அதிகாரியின் தனி அலுவலராகப் (Personal Assistant) பணியாற்றி வந்தார். சென்னை வந்தவுடன். அவரைச் சந்தித்து அவரை இட்டுக் கொண்டு கல்வி இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று நான்காம் படிவம் திறக்கும் நிலைபற்றிக் கவனித்ததில் கோவையி லிருந்து வி. ஆர். அரங்கநாதமுதலியார் பரிந்துரைக்காதது மட்டுமின்றிக் கடுமையாகவும் எழுதியது தெரிந்தது. சிங்கார வேலு முதலியாரும், வி.ஆர்.ஆர். எழுதியவற்றை” எவராலும் மாற்றமுடியாது. அலுவலகத்தில் அதைப் புறக் கணித்துக் குறிப்பு வைக்க எவருக்கும் துணிவு இருக்காது. இயக்குநர் ஆர்.எம். ஸ்ட்ராத்தம் துரையும் முதலியார் பரிந்துரைக்கு விரோதமாகச் செய்யமாட்டார். என்ன செய்வது?இறைவன் விட்டவழி இதுதான்' என்று சொல்லித் தம் இயலாமையைக் கூறிவிட்டார். - - நான் சிங்காரவேலு முதலியாரிடம், 'ஐயா, நான்காம் பாரம் திறப்பதற்கு மறுத்துவிடும் ஆணை எங்கள் தாள :ள (ருக்குப் போகாமல் என் கையில் கிடைக்க ஏற்பாடு செய்யுங் கள். அதற்குமேல் இறைவன் துணையால் நான் முயல்