பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1+2 நினைவுக் குமிழிகள்-2

பதினைந்து நாட்கள் இராமச்சந்திர அய்யர் வீட்டில் தங்கியிருக்கும்போது அவர் குடும்பநிலை, அன்றாட வாழ்க்கையைச் சிரமத்துடன் நடத்தியதுபோன்ற விவரங் களை அறிந்தேன். கைத்தறி வேட்டியை உடுத்துபவராகவும்: அதைத் தானே குழாயில் துவைத்து உலர்த்திவந்ததையும் அறிந்தேன். சட்டை, கோட், அங்கவஸ்திரம் -இவை மட்டிலும் லாண்டரிக்குப்போட்டு வாங்கப்படுபவை, இடுப்பு வேட்டிமட்டிலும் நீர்க்காவி ஏறி இருக்கும். இவருக்கு ஏதாவது அன்பளிப்பு செய்யவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டிருந்தேன், என் ரூ 40/- மாத ஊதியத்தில் எதைத்தான் செய்யமுடியும்? 100க்கு 80 நம்பரில் நெய்யப் பெற்ற சிவராயர்கரைபோட்டு கைத்தறி வேட்டிகள் ஆறு சோடி அனுப்பலாம்என நினைத்து துரையிடம் சொன்னேன். அவரும் தன் அமைச்சர் இலிங்கையர் மூலம் 6 கோடி வேட்டி கள் கிடைக்கச் செய்தார். இந்த வேட்டிகளுக்குத் துறையூரும் தாத்தய்யங்கார் பேட்டையும் பெயர்போனவை, வேட்டிகள் தாத்தய்யங்கார் பேட்டையிலிருந்துதான்வந்தன. இவற்றைப் பார்சல்மூலம் இராமச்சந்திர அய்யர் துணைவி யார் பேருக்கு அனுப்பிவைத்தேன். இராமச்சந்திர அய்யர் எதையும் ஏற்றுக்கொள்ளார் என்பதை நான் நன்கு பழகியதால் அறிந்திருந்தேன். கைச்சுத்தமான Ձրք அலுவலரை அக்காலத்தில் கண்டது வியப்பினும் வியப்பாக இருந்தது. அன்றைய நிலையில் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை அன்றாடம் நடைபெற்றுவரும் கையூட்டுக் சுத்துகளை நினைக்கும்போது இராமச்சந்திர அய்யரின் நல் தொண்டு இமயமலை அளவு உயர்ந்துகாணப்பெறுகின்றது மக்களாட்சி முறையில் இன்று நடைபெறும் அக்கிரமங்கள், அடாவடித் தனங்கள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண் டிருக்கும் இறைவன் ஏன் கண்மூடி மெளனியாக இருக் கின்றானோ என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை,