பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கர் நன்மைக்கான நற்செயல்கள் 113

குமிழி-80 16. மாணாக்கர் நன்மைக்கான நற்செயல்கள்

கல்விப் பணியை ஏற்றுக் கொண்ட நாள்முதல் கல்வி யைப் பற்றிய சிந்தனையிலேயே ஊறிக் கிடப்பேன். ஏழைச் சிறுவர்களை எப்படி முன்னேற்றுவது என்ற சிந்தனையே எப்போதும் என்மனத்தில் மீதுர்ந்து நிற்கும். பாரதியாரின் பாடல்கள் என் உணர்ச்சியைத் தூண்டுவனவாக அமையும்,

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் * ஆல யம்பதி னாயிரம் நாட்டல்: பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.’ என்ற பாடல் அடிக்கடி என் சிந்தனையில் முகிழ்த்துக் கொண்டிருக்கும். குறிப்பாக, -

ஆங்கோர் ஏழைக் * கெழுத்தறி வித்தல்

என்ற அடி என்னைக் கிளர்ந்தெழச் செய்யும்.

சென்னை கல்வித்துறை விதிகளில் (92 MER) 92ஆம் விதியின்கீழ் சம்பளச் சலுகை பெறவேண்டிய சாதிகளின் பெயர்கள் உள்ளன. இந்தச் சாதிகள் Scheeduled Castes, Scheduled Tribes, Backward Classes aro, so opsism offs,

1. பா. பா : தோத்திரப் - வெள்ளைத்தாமரை 9,

நி-8