பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - நினைவுக் குமிழிகள்-2

களில் சாதியினர் உண்மையிலேயே ஏழைகளாக இருந்தனர். இவர்கட்குக் கட்டணம் விதிவிலக்கு. மூன்றாவது பிரிவில் உள்ளவர்களில் ஏழைகளும் இருந்தனர்; செல்வர்களும் இருந்தனர். அக்காலத்தில் நெசவாளர்கள் (பெரும்பாலும் செங்குந்தர்கள், தேவாங்க வகுப்பினர்) இவர்கட்கு நல்ல வருவாய் இருந்ததை நான் நன்கு அறிவேன். பெரும்பாலும் இந்தச் சாதியினர் துறையூர், தாத்தையங்கார் பேட்டை மேட்டுப்பாளையம் இவ்விடங்களில் அதிகமாக இருந்தனர்; துறையூரில் மட்டிலும் தேவாங்கர்கள் அதிகமாக இருந்தனர். இவர்களில் பலர் வருமானவரி, விற்பனைவரி ஆயிரக் கணக்கில் செலுத்துபவர்களும் வட்ட ஆட்சியாளர்(Tasildar) சான்றிதழ்கள் பெற்று அரைக் கட்டணச் சலுகை பெற்றுக் கொண்டனர். பத்மசாலியர் வகுப்பைச் சார்ந்தவர்கள் நல்ல நிலையில் இல்லை. இவர்கள் பிள்ளைகள் அரைக் கட்டணச் சலுகை பெற்றது. நியாயமாக இருந்தது.

இவர்களைத் தவிர துறையூர்ப் பகுதியில் ரெட்டியார் கள், (தமிழ்ச்) செட்டியார்கள், ஆரிய வைசியர்கள், பிராமணர்கள், வேளாளர்களில் சில பிரிவினர் பரம ஏழை களாக இருந்தாலும் கட்டணச் சலுகை பெற வாய்ப்பே இல்லாதிருந்தனர். இவர்களில் திறமையான மாணாக்கர்கள் கூட எந்தச் சலுகையும் பெற வாய்ப்பில்லாதது எனக்கு மிகவும் வருத்தத்தை விளைவித்துக் கொண்டிருந்தது, சென்னைக் கல்வித்துறை மானியம் பற்றிய விதிகளில் 32-வது பிரிவின்படி (32 Grant-in-code) பள்ளிக் கட்டண வருவாயில் 10 சதவிகிதம் கட்டணச் சலுகை வழங்கலாம். இதைப் பயன்படுத்திச் சலுகை வழங்கினால் பள்ளிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் ஏழை மாணவர்களும் பயன் அடைவார்கள் என்று தாளாளர் சின்னதுரை முன்திட்டம் வைத்து இசைவு தரு மாறுவேண்டினேன். அவர் மனம் இரங்கி 5சதவிகிதம்சலுகை