பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நினைவுக் குமிழிகள்-2

1950) இத்திட்டம் நன்கு செயற்பட்டு வந்தது. ஒருவர் ஆறாம் வகுப்பு (முதல் படிவம்) மாணவருக்குச் சலுகை தர இசைந்தால் அவர் அந்த மாணவர் பதினொன்றாவது வகுப்பு (ஆறாம் படிவம்) முடிக்கும்வரை இந்தச் சலுகைக் குரிய செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்படி ஏழை மாணவர்க்கு உதவி செய்ய எம்பெருமான் என்னைக் கருவி யாக வைத்ததை இன்றும் நினைத்துப் பார்த்து மகிழ் கின்றேன்: பெருமிதம் அடைகின்றேன்.

அன்பர்பணி செய்யஎனை

ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து

எய்தும்; பரா பரமே.” -

என்ற தாயுமானவரின் திருவாக்கை நினைந்து நினைந்து உருகுகின்றேன். இங்ங்னம என்னை நல்வழிப்படுத்தின இறைவனின் கருணைத் திறத்தை எண்ணி எண்ணிப் போற்றுகின்றேன். இதனால் முற்போக்கு சாதியினரைச் சார்ந்த பல ஏழை மாணாக்கர்கள தம் கல்வியைச் சலுகை யினால் தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இன்றைய நிலைவேறு. பொதுவாக எல்லோருமே கட்டணமின்றி உயர்நிலைப்பள்ளிக் கல்வியைப் பெறு கின்றனர். 1962 வரையில் ஒருசிறு முற்போக்கு பகுதியினர் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது . பெருந்தலைவர்மக்கள் நிலையை நன்கு அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் காமராசர் ஆட்சியில் இவர்கட்கும் சலுகை ஏற்பட்டது. அவர் ஆட்சிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் சில சிறப்புக் கட்டணங்களைத்தவிர கல்வி பெறுவதற்கென கட்டணம் செலுத்தத் தேவை இல்லை என்ற நிலை

2. தா. பா : பராபரக்கண்ணி-155