பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 20 நினைவுக் குமிழிகள்-2

பொருத்தச் செய்து வசதி செய்து கொடுத்தேன். மேல் வகுப்பு மாணவர்கள் மட்டும் வீட்டில் வசதியில்லாதவர்கள் இங்கு வந்து படிக்கலாம் என்று அறிவித்தேன். இந்த வசதியைப் பத்து, பதினைந்து மாணவர்கள் பயன் படுத்திக் கொண்டனர். பள்ளியிறுதித் தேர்வு செல்லும் மாணாக்கர் களை மட்டிலும் இரவில் தங்கிப் படிக்கும் போது அவர்கட்கு ஏற்படும் ஐயங்களை அவ்வப் போது அகற்றுவேன். என்சிறிய இல்லமும் பள்ளியின் ஒருபகுதியாக இருந்தமையால் இவர் களைக் கவனிப்பது எனக்கு எளிதாக இருந்தது. துறையூரில், இருந்தவரையில்எனக்கு மக்கட்பேறும் ஏற்படாததால், குடும் பப்பிரச்சினைகள் அதிகமாக இல்லை." என்கவனம் முழுவதும் பள்ளிவளர்ச்சிக்கும் மாணவர்கள் முன்னேற்றத்திற்குமே பயன் பட்டது. நாட்டுப் புறத்திலிருந்துவரும் பெற்றோர்கள் என் மக்கட் பேறுபற்றி விசாரிக்கும் பொழுது, பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைளருமே என் பிள்ளைகள்' என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வேன். அவர்களும் என் பரந்த எண்ணத்தைப் பாராட்டுவார்கள், ஆயினும் என் குரலில் அடிநாதமாக ஒலிக்கும் நுண்ணிய ஏக்கத்தையும் கண்டு கொள்வார்கள்; விரைவில் மக்கட்பேறு ஏற்படும் என்று வாழ்த்தவும் செய்வார்கள்,

இரவில் பள்ளிக்கு வரும் மாணாக்கர் 8 மணிக்கே வந்து விடுவார்கள்: 10 மணிவரையில் படிப்பார்கள். நான் 40 மணி வரையில் அவர்களைக் கவனிப்பேன். அதற்குமேலும் ஒரு சிலர் படிப்பார்கள்: ஆசிரியர்கள் தரும் வீட்டு-வேலையை யும் (Home-work) செய்வார்கள். இந்நிலையில் தான் அவர் கட்கு ஏற்படும் ஐயங்களைப் போக்குவேன். சில மாணவர் விடியற்காலை நாலரை, ஐந்து மணிக்கு எழுந்து படிப்பர்.

5. 1936-இல்லை; 1949 இல்தான் 4ఉతLGup ஏற் - - . • التي سانتالا