பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணியத்தின் திருவிளையாடல்கள் 121

அப்பொழுதும் தேவையானால் ஏற்ற பெற்றி அவர்கட்கு உதவுவேன். 1945 ஆம் ஆண்டு தொடங்கி 1950 மார்ச்சு முடிய நான் துறையூரில் இருந்தவரையில் இங்ங்ணம் உதவி வந்தேன். இந்நிகழ்ச்சிகள் யாவும் இப்போது நினைவில் எழுந்து குமிழிகளாக வெளிப்படுகின்றன. இப்போதெல்லாம் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற அப்பர் பெரு மானின் வாக்கு நினைவிலிருந்து கொண்டே இருக்கும்.

- குமிழி-81 17. சுப்பிரமணியத்தின் திருவிளையாடல்கள்

5 ன் மைத்துனரின் தாயாரைப்பற்றிய சிந்தனை: புரோநோட்டுகள் மகளிடம் போய்விட்டன. சர்ரண்டர் பத்திரமும் எழுதியாய்விட்டது; வருமானத்தையும் கேட்க வழி இல்லை. கிட்டத்தட்ட பல்லைப்பிடுங்கிய பாம்புதான்' என்று மகிழ்ச்சியுடன் சிந்தித்திருக்க வேண்டும். ஆயினும் சூழ்ச்சியால் நிறைவேற்றப் படக்கூடிய காரியங்கள் இன்னும் உள்ளன. அவற்றையும் நிறைவேற்ற யோசித்துக் கொண் டிருந்தனர். -

(1) என்மானார் வீடு பத்து மனை பரப்பளவு (10X24,00= ச.கெ) இருக்கும். அதில் அரைமனை அளவு அண்மையில் தான் வாங்கப்பட்டது. அது வாங்கப் பட்டதால்தான் வீடு கதுரமான பரப்புக்குள் அமைந்தது. இதில்தான் உறை கிணறும வெட்டப்பட்டது. சரியான ஊற்று இல்லை. பொட்டணத்திலேயே எல்லாக் கிணறுகளும் இதே நிலை தான். இந்த மனையையும் வாங்கும்போது ஏதாவது சிக்கல் இருக்கக் கூடும் என ஐயங் கொண்டு தன் தாயார்

6. அப்பர் தேவாரம்: 5.19:?