பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணியத்தின் திருவிளையாடல்கள் 125

ஊரெங்கும் தெரிந்துவிட்டது. சுப்பிரமணியம் அப்போது பொட்டணத்தில்தான் இருந்திருக்கவேண்டும். அவர் யோசனைப்படித் தடியும் கம்புமாக அடியாட்கள் குண்டுத் தம்புவைத் துரத்திக்கொண்டு பின் தொடர்ந்தனர். வேடிக்கைப் பார்க்கும்-ஆண்கள்-பெண்கள் உட்பட-கூட்ட மும் சாவகாசமாக நடந்து சென்றது. அந்த ஊர்ப் பெரியவர் செல்வர்,வயதுமுதிர்ந்ததிரு.பொன்னமரெட்டியாரும்தடியை ஊன்றிக்கொண்டு எல்லோருக்கும் பின்னால் மெதுவாக நடந்து போய்க்கொண்டிருந்தார். குண்டுத்தம்பு 2 கல் நடந்துவிட்டார். பின்னால் தடியும் கம்புமாகத் தன்னைத் துரத்திவரும் கூட்டத்தைக் கண்டு கையில் தாளில் சுற்றி வைத்திருந்த சங்கிலியைக் கூட்டத்தை நோக்கித் தூக்கி எறிந்துவிட்டு ஒட்டம் பிடித்து அருகிலுள்ள ஊர் கிராம முனிசீப் (செல்வாக்குள்ள கவுண்டர்) வீட்டில் சரண் புகுந்து விட்டார். கவுண்டரும் அபயம் வழங்கினார்.

பின்தொடர்ந்து ஓடிய கூட்டத்தில் ஒருவர் அந்தச் சங்கிலியை எடுத்துக்கொண்டார். இவர் பொது மனிதர். இவரைச் சங்கிலியைத் தருமாறு என் மைத்துனரோ, சுப்பிர மணியமோ வற்புறுத்தவில்லை. ஊருக்குப் போய்ப் பார்த் துக் கொள்ளலாம் என்று கருதி விட்டு வைத்தனர் போலும், ஆனால் அந்த நல்லவர் (வல்லவரும் கூட) அந்தச் சங்கிலியைப் பின்னால் நடந்து வந்துக் கொண்டிருந்த திரு. பொன்னம்மரெட்டியாரிடம் சேர்த்துவிட்டார். இனி சங்கி லிக்குப் பாதுகாப்புதான் என்று என்மைத்துனர் முதலியோரும் வாளா இருந்துவிட்டனர். அடுத்தநாள் என் மைத்துனர் பொன்னம ரெட்டியார் இல்லம் சென்று, சங்கிலியைத் தாருங்கள் என்று கேட்க, அவர் எந்தச் சங்கிலி' என்று வினவ, என் தாயார் சங்கிலி' என்று பதிலிறுக்க, நீ என்னிடம் கொடுத்தாயா கேட்பதற்கு?' என்று மறுத்துவிட அவரும் வாளா வீட்டிற்குத் திரும்பினார். -