பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நினைவுக் குமிழிகள்-2

அடுத்து என். மாமானார் சென்றார். இருவரும் ஒத்த வயதுடையவர்கள்: நண்பர்கள். 'சங்கிலியைத் தாருங்கள்’ என்று கேட்க, எந்தச் சங்கிலி?’ என்று திருப்பிக் கேட்க, "என் மனைவியின் சங்கிலி என்று சொல்ல, 'அதனை உங்களிடம் தர முடியாது. நீங்கள் அதை என்னிடம் தர வில்லை. உங்கட்குக் கேட்பதற்கே உரிமை இல்லை. அது போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும்' என்று மறுத்துவிட்டார். என் மாமியார் சென்று அதனைக் கேட்கவில்லை. தன் மகன், கணவன் இவர்கட்குத் தந்த மறுமொழிதான் தனக்கும் வரும் என்று வாளா இருந்து விட்டார் போலும்! மூன்றாம்நாள் திரு அரங்கசாமிரெட்டி யாரைக் கூப்பிட்டு, 'நீ துறையூரில் ரூ. 500-ஐக் கொண்டு போய் சேர்த்தாயலவா? அப்படியே இந்தச் சங்கிலியையும் எடுத்துச் சென்று மகளிடம் சேர்த்துவிடு' என்று சொல்ல, அவரும் மகிழ்ச்சியுடன் சங்கிலியை எங்களிடம் சேர்த்து விட்டார்.

(3) என் மாமியார் குண்டுத் தம்புவை அழைத்துக் கொண்டு போடிநாய்க்கன்பட்டி சென்று மிட்டாதார்கள் இருவரைவும், மூன்றாம் மனிதர் இராமநாதனையும் தனக் குரிய ரூ. 5000- யும் தன்னிடம் தருமாறும், தான் அத் தொகைக்கு ரசீது தந்துவிடுவதாகவும் சொல்லிக் கேட்டார். 'புரோநோட்டு உங்கள் பேரில்தான் உள்ளது என்பது தெரியும். பணத்தை உங்களிடம் தர முடியாது. நோட்டீஸ் அனுப்புங்கள். பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டனர். உடனே யாரையோ பிடித்து நோட்டீஸ் எழுதி பதிவு அஞ்சலில் அனுப்பிவைத்தார் என் மாமியார். மிட்டா தார் குடும்பத்திற்குச் சுப்பிரமணியம் மிகவும் வேண்டியவர். அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய செய்தி.எட்டியது. என் மைத் துனரும் சுப்பிரமணியமும் சேர்ந்து சென்று மிட்டாதாரர் களை நோட்டீஸ் வாங்கிகொள்ளவேண்டா என்று தடுத்து