பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 --- நினைவுக் குமிழிகள்-2

அவரும் தன் மருமகனைத் தோற்பாவைபோல் ஆட்டி வைக் கின்றார். கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழி பொய்க்குமா? வினைவிதைத்தவன் வினையைத்தானே அறுக்க முடியும்?

குமிழி-82 18. வழக்குத் தொடர்கள்

6ரின் மாமியார் தாய்வழியாகத் தமக்குச் சட்டப்படிச் சேரவேண்டிய சொத்துகளை நரிதின்ற கோழியாக்கி தெரு வில் நின்று உண்பதற்கும் உறைவிடத்திற்கும் பிறர் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பெற்றதைக் கேட்டு என் மனைவியால் வாளா இருக்கமுடியவில்லை. பெற்ற வயிறு தவிப்பதை யாரால் சகிக்க முடியும்? எப்படி யும் அவர்களைத் துறையூருக்குக் கூட்டி வந்துவிடவேண்டும் என்று துடிதுடித்தாள். என்னால் அந்த ஊருக்குப் (பொட்ட னத்திற்குப்) போகமுடியாது என்று கூறிவிட்டேன்; தன்னாலும் போகமுடியாது என்பதை உணர்கின்றாள். எப்படி இட்டுக் கொண்டு வருவது என்று சிந்தித்ததில் எனக்கு ஒரு வழி தோன்றியது.

பொட்டணத்தில் வீரமரெட்டியார் என்பவர் ஒருவர்; பொன்னமரெட்டியார் என்பவரின் மருமக்ன். நல்லிப் பாளையத்தைச் சேர்ந்த இவர் தம்முடைய சொத்துகளை யெல்லாம் பிரித்துக்கொள்ள வகையின்றித் தம்முடைய மாமனார் வீட்டிற்கே குடிபுகுந்துவிட்டார். தம் மனைவி தம் மாமனாருக்கு ஒரே பெண்; இலட்சத்திற்கு மேல் சொத்து மதிப்புடைய குடும்பத்தின் ஒரே வாரிசு. இவர் தம்முடைய வேலையைச் சிறிதும் கவனியாவிட்டாலும் தம்முடைய யோசனையையும் தாம் அநுபவத்தால் பெற்ற நுண்ணறி வையும் பிறர் நலனுக்கு வழங்குவதில் ஒரு ரிப்வான் விங்கில். என் மாமியாரைத் துறையூருக்கு இட்டுவந்து எங்கள் பாது