பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நினைவுக் குமிழிகள்-2

தோற்றுவிட்டால் தன் மானம், மரியாதை, பெருமைஎல்லாம் பறிபோகும் என்று நினைக்கின்றார். தோற்றுவிட்டால் செலவுத்தொகை பிரதிவாதிகட்குத் தரும்படி நேரிடும். இது மானக்கேடான செயல் என்றும் கருதுகின்றார். உங்கள்மீது சொத்து இல்லையென்றால், உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்களுக்கு சிறைவாசம் இல்லை. உங்கள் பேரில் ஆலத்துடையாம்பட்டியில் இரண்டு ஏக்கர் நிலம் இருக் கின்றதே என்று கவலைப்படுகின்றார்' என்று.

உடனே என் மாமியார், "என்ன செய்யலாம்? யோசனை கூறுங்கள்' என்றுகேட்க, வீரமரெட்டியார், ஒன்று சொல்லுகின்றேன், கேட்பீர்களா? உங்கள்பேரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தையும் உங்கள் மகள்பேருக்கு நிபந்தனை இல்லாத ஒப்பந்த பத்திரம் ((Unconditional Settlement) எழுதிப் பதிவு செய்துவிடுங்கள். இப்பொழுது உங்கள் மீது சொத்து இல்லையாதலால் வழக்குதோற்றாலும் உங்களைத் தீர்ப்பு ஒன்றும் செய்யமுடியாது.” என்று கூற, என் மாமியாரும் இவரது யோசனைப்படிச் செய்வதாக ஒப்புக்கொண்டு பத்திரமும் எழுதி உப்பிலியபுரம் சார்பதி வாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து தந்துவிட்டார்.

'இனி இந்த அம்மாள் சபலத்தால் மனம் மாற முடியாது. குண்டுத்தம்புவும் இவர் வழிக்கு வாரார். நீங்கள் வக்கீலைக் கலந்து மிட்டாதார்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று சொல்லி அதற்கு ஆவன செய்யலாம்' என்று கூறி விடை பெற்றுச்சென்றார் வீரமரெட்டியார்.என மனம் செயற்படத் தொடங்கியது. என் நண்பர் வக்கில் P. அரங்கசாமி ரெட்டியாரைக் கலந்தேன். அவரும், "நான் முதலில் என். பொன்னுசாமி ரெட்டியாருக்கும் அவர் தம்பி என். கிருஷ்ண ராஜூ ரெட்டியாருக்ரும் நோட்டீஸ் அனுப்புகிறேன். அவர் கள் கட்டாயம் பதில் நோட்டீஸ் அனுப்புவார்கள். அவர்கள்