பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குத் தொடர்கள் 13;

தரும் பதிலைக் கொண்டு மேல்ந. வடிக்கைகள் எடுக்கலாம்” என்று கூறி இருவருக்கும் நோட்டீசுகள் அனுப்பினார். இராமநாதன் என்பவரை இந்த வழக்கிலிருந்து விலக்கி விட்டோம். z

பதினைந்து நாட்களில் அண்ணனும் தம்பியும் துரைசாமி அய்யர் என்ற வக்கீலைக் கலந்து (இவரைத் துரை வக்கில் என்று பொதுமக்கள் வழங்குவார்கன்) பதில் நோட்டிசுகளை அனுப்பினார்கள். அவற்றில் நாங்கள் பெரியம்மாளிடம் எந்தத் தொகையும் வாங்கவில்லை; புரோநோட்டுகளும் எழுதித் தரவில்லை. அந்த அம்மாளுக்கும் மகனுக்கும் ஏதோ - தகராறு நடைபெற்றது. அதைப் :சல்செய்து தீர்த்து வைக்குமாறு எங்களைக் கேட்டுக்கோண்டார்கள். நாங்கள் "எங்களால் இது செய்ய இயலாது” என்று சொல்லிவிட்டோம். இதனால் எங்கள் மீது சினம்கொண்டு அநியாயமாக நோட்டிசு அனுப்பியுள்ளார்கள். ஏதாவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும் அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்லிவிட்டார்கள்.

(1) இந்தப் பதில் நோட்டிசைக் கண்டு சிறிது பிடி உள்ளது; நீங்கள் நாமக்கல்லில் உள்ள நல்ல வக்கீலைக் கலந்து வழக்கு தொடரலாம்’ என்று சொன்னார் வக்கீல் அரங்கசாமி ரெட்டியார். நான் செலவுக்குப் பணம் எடுத்துக் கொண்டு நாமக்கல் சென்று யோக்கியமான வக்கீல் என்று பெயர்பெற்ற கே. வீரராகவ அய்யங்கார் என்ற பிளிடரைக் கலந்தேன். இவர் நல்ல செல்வர். அந்தக் காலத்தில் மெட்ரிக் வரையில்தான் படித்தவர்; வழக்கறிஞர் தொழிலைத் திறம்படச் செய்துவந்தார். யோக்கியதைக்குப் பேர்போனவர். இவரைக் கலந்ததில் வழக்கு தொடரலாம்’ என்று சொன்னார். முதலில் பொன்னுசாமி ரெட்டியார் பேரில் உள்ள ரூ. 3000/-க்கு வழக்குத் தொடர்ந்தோம்.