பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குத் தொடர்கள் 133

அதனைத் தள்ளுபடி செய்து தானசாசனம் ஏற்பட்டதும். பொறுப்பு ஒப்படைப்பு சாசனம் ஏமாற்றி வாங்கப்பட்டது மான செய்திகள் யாவும் கூறப்பெற்றன. அவர்களிடமிருந்து பதில் நோட்டீசுகள் பெற்றதும் வாழ்க்கைத் தேவைப் பிராது துறையூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பெற்றது. இந்த வழக்கு தொடர்ந்து இரண்டாண்டுகள் நடைபெற்றது.

(2) என் மனைவிபேரில் உள்ள 16ஏக்கர் புன்செய்காட்டுக்கு மூன்றாண்டு குத்தகை ரூ. 900/- பாக்கி; இதனை உடனே செலுத்தவேண்டும் என்று வீரராகவ அய்யங்கார் முலம் என் மாமனாருக்கும் மைத்துனருக்கும் நோட்டீஸ் அனுப் பினாள் என் மனைவி, இதற்குப் பதில் நோட்டீசில் "நான் உங்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவும் இல்லை; எந்தப் பாக்கியும் தரவேண்டியதில்லை' என்று தெரிவிக்கப் பெற்றது. அப்போது அந்தக் காட்டில் சோளமும் எள்ளும் அறுவடைக்குத் தயாராக இருந்தது. மகசூலின் அக்கால மதிப்பு ரூ. 1000/- இருக்கும். சின்ன குண்டுத்தம்பு ரூ. 3|- கூலி வீதம் 100 ஆட்களைவிட்டு இரவோடு இரவாக அறுவடை செய்ய ஏற்பாடு செய்துவிட்டு துறையூர்வந்து சேர்ந்தார். நானும் அவரும் முதல் பேருந்தில் அதிகாலையில் கிளம்பி காலை 7-30 சுமாருக்குக் காட்டை அடைந்தோம். நாமக்கல் தாண்டி சேலம்போகும் சாலையில் 2 கல் தொலைவு கடந்து காட்டை அடையவேண்டும். நாங்கள் காட்டை அடைந்ததும் அங்கிருந்த பெரிய குண்டுத்தம்பு தம் தம்பியை நோக்கி, தம்பி. நீ இராமசாமி, சுப்பிரமணியம் கண்ணில்படாமல் மறைந்து கொள்க. நின்னைத் தாக்கி ன்ாலும் தாக்கலாம்' என்று கூற அவரும் மறை வாகவே இருந்துகொண்டார். சோளம், எள்ளுச்செடி இரவோடு இரவாக அறுவடை செய்யப்பெறுவதை அறிந்து என் மைத்துனர் இராமசாமி ரெட்டியார் தன் மாமனார்