பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv

மதியால் வெல்லலாம் என்பதனை விளக்குகின்றது (பக். 67-68). மேலும் எந்த ஒரு விதியும் அது பொது நலனுக்கு ஆறுதுணை புரியும் தன்மையை வைத்தே மதிப்பிடப் பட வேண்டும் என்பதனையும் இந்நிகழ்ச்சி எடுத்துக் கூறுகின்நிதிக

உலகில் ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது;வல்லவராகவும்.உலகியல் புரிந்தவராகவும். இருக்க வேண்டுவதனைப் பேராசிரியர்அவர்களின் வாழ்க்கைநிகழ்ச்சி கள் எடுத்துக் கூறுகின்றன. சீதனப் பணத்தின் நிலைபற்றிப் பேராசிரியர் கொண்ட கருத்தும்_(பக்.96), நாமக்கல் நீதி மன்றத்தில் குடும்ப வழக்குத் தொடர்பாக அவர் மேற் கொண்ட செயற்பாடுகளும்,பேராசிரியரின் உலகியல் அறிவை யும், வினைத்திட்பத்தையும் விளக்குவனவாகும்.

சிறுதிறப்பட்ட நேர்வுகளில் கூட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க மனமில்லாமை, அடுத்தவர்கள் மனம் புண் ப்டக்கூடாது என்ற எண்ணம் அல்லது இடையூறு ஏற்படும் என்ற அச்சம் ஆகியன மெல்ல மெல்ல ஒருவருட்ைய நேர்மையுணர்வினை ஆழித்து அதன்மூலம் நம்முடைய சமுதாயத்தையே பொய்யர்கள் நிறைந்த கூட்டமாக மாற்றி வரும் நிலைமையினைக் காண்கின்றோம். ஆனால் பேராசிரியர் அவர்கள் தம் சொந்த எண்ண்த்தில் எழுபவை பெரும்பாலும் சரியாக இருக்கும் (பக். 54) என்பதில் நம்பிக்கையுடையவர். துணிவையே துணையாகக் கொண் ட்வர். மாவட்டக் கல்வி அதிகாரியின் எண்ணப்படி பள்ளிக்கு அநுபவம் மிக்க ஒருவரைத் தலைமையாசிரியராகப் போட iேண்டுமெனத் தாளாளர் தெரிவித்ததற்குப் பேராசிரியர் அஞ்சாமல் தம்_கருத்தினை_உறுதியுடன் எடுத்துக் கூறி புள்ளார் (பக். 57), பேராசிரியர் தமக்குச் சரியெனப் பீட்டதை அஞ்சாமல் எடுத்துரைக்கும் இயல்பினர்.

தமிழ் மொழி வளர்ச்சி குறித்தும், தமிழ்க்கலைச் சொல் லாக்கம் குறித்தும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பழமைக்கும் பழமையான தமிழ் புதுமைக்கும் புதுமையாய் வளர்ந்தோங்க வகைசெய்யும் என்பதில் ஐயமில்லை.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில தமிழாக்கங்கள் வழக்கிலுள்ளவற்றுக்குச் சற்று முரண்படுமாறு உள்ளன. (at, sm.) Play ground (4,65grið) Lé. 166); Public Service Ĉommission (@ufrĝiú Llanañ &#qw6wuiiĥ) (ciêš. 60); Persona! Assistant (தனி அலுவலர்) (பக். 107). நூலில் ஆங்காங்கே