பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நினைவுக் குமிழிகள்-2

யும் மகனையும் ஒதுக்கிவைத்தமை. இவள் துர்மரணத்திற்கு ஆளாவாள் என்று எதிர்பார்த்கமை. சுப்பிரமணியம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினது போல சோதிடர்களைக் கொண்டு இந்த மரணத்தை உறுதிப்படுத்தினமை. இஃதும் ஒரு மாபெரும் பெண் பாவம்.

(3) நீதிமன்றமே கதி; குடும்பங்களைத் தூண்டிவிட்டு வழக்குகளை ஏற்படுத்தி இதையே தன் பிழைப்பிற்கு வருவாயாகக் கொண்டு வாழும் சுப்பிரமணியத்து வீட்டில் பெண் எடுத்தமை.

இந்த மூன்று காரணங்களால் பல்வேறு விபரீதங்கள் கிளைத்து மன அமைதி சிறிதுமின்றி சொத்துகளை எல்லாம் இழந்து, நோயினால் பல்வேறு இன்னல்களை அநுபவித்து, ஐந்து பிள்ளைகளை (நான்கு பெண்கள்-ஒரு பையன்) விட்டு இரண்டாம் மனைவியும் இறக்க தேர்ந்து விட்ட நிலைமைகளை இறுதிக் காலத்திலாவது நினைத்துப் பார்த்து மனம் வருந்தி இருக்க வேண்டும். என் மைத்துனர் பொல்லாதவர் அல்லர். தீயவர் உறவால் இவற்றை எல்லாம் அநுபவிக்க நேர்ந்தது.

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானே தான்செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி.' என்ற பாடலை நினைந்த வண்ணம் இக்குமிழியும் நிறைவு பெறுகின்றது.

1. அறநெறிக்சாரம்-51