பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நினைவுக் குமிழிகள்-2

வழக்குகள் விசாரணைக்கு வந்தன. மிட்டாதார்கள் கிளிக்கூண்டு ஏறும் நிலையும் வந்தது. இந்த நாளைத் தெரிந்து கொண்டு அக்கம்பக்க ஊர்களிலிருந்து சுமார் 20 பேர்களுக்குமேல் வேடிக்கை பார்ப்பதற்காகவே நாமக்கல் வந்து சேர்ந்தனர். இவர்கள் ஒருவரையும் நான் அறியேன். என்னை அவர்கள் பார்க்காவிட்டாலும் நான் வகிக்கும் பொறுப்புள்ள பதவியால் எல்லோகும் என்னைப்பற்றி அறிந்திருந்தனர். விசாரணையன்று என் மாமியாரை நல்ல பட்டாடை உடுத்தச் செய்து நகைகளை அணியச்செய்து கர்ப்பூரச் சுடரை அவித்து சத்தியம் கேட்கத் தயாராக்கி னேன். வக்கில், இந்த ஏற்பாடு வேண்டா. சத்தியத்தை வற்புறுத்த முடியாது' என்றார். "இதில் முயல்வோம். அவர்கள் ஒருப்படாவிட்டால் வழக்குகளை முறைப்படித் தொடர்வோம்” என்றேன். என்னரெட்டியார், சிறுபிள்ளை போல், பள்ளி மாணவன் போல், உலகம் தெரியாதவராக இருக்கிறீர்களே” என்றார் வீரராகவ அய்யங்கார் தந்தை பாசத்துடன். நான் “நீங்கள் என்னை நன்றாக எடை போட்டீர்கள். உண்மையில் கள்ளம் கபடம் அற்ற மாணவன் தான். உலகச்சாயம் இன்னும் என் மீது படியவில்லை, தில்லு முல்லும் செய்யத் தெரியாது. யாராவது அதனை மேற் கொண்டால் அதனை அறிந்து கொள்ளும் திறனும் எனக்கு இல்லை. தந்தைபோல் அறிவுரை கூறுகின்றீர்கள். இதற்கு மிகவும் நன்றி. என் வழிக்கும் சிறிது இடம் தாருங்கள். இது இறைவன் விட்டவழியாகவும் இருக்கட்டும்'என்றேன் நான். "சரி, பெருமாள்மீது பாரம் போட்டுச் செயற்படுகின்றீர்கள். நடக்கட்டும்' என்று பச்சைக்கொடி காட்டினார்.

அந்தப் பக்கத்தில் இது வரலாற்றுப் புகழ் பெற்ற வழக்காதலால் வேடிக்கை பார்ப்போர் கூட்டம் அதிகமாகத் திரண்டிருந்தது. சுப்பிரமணியம், என் மைத்துனர் இவர் களைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாகவுே