பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு முடிவுகள் 139

வந்திருந்தனர். 2 பலம் கர்ப்பூரம், தீப்பெட்டி, ரூ. 500/அடங்கிய காதிதஉறை இவற்துடன் என் மாமியாரைக் கிளிக் கூண்டு ஏறச்செய்தேன். "ஐயா, நீதிபதியவர்களே, "என் குலதெய்வம் சாட்சியாக நான் இந்த அம்மாளிடம் கைநீட்டிக் கடன் வாங்க வில்லை என்று சொல்லி எரியும் கர்ப்பூரத்தை அவித்து விட்டால் போதும். நான் என்னு டைய வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். கோர்ட் டார் பிரதிவாதிகட்கு ஏதாவது செலவுத் தொகை கட்ட வேண்டும் என்று சொன்னால் இதோ ரூ 500/- இந்த இந்த உறையில் உள்ளது” என்று சொல்லும்போது சுப்பிர மணியத்துடன் வந்திருந்த கூட்டம் கண்ணில் படவே, 'சுவாமி இந்த துரியோதனாதியர்கள் கூட்டம்தான் என் குடும்பத்தைக் கெடுத்தது. பபோவி என் சம்பந்தி சுப்பிர மணியம் நாசமாகப் போகட்டும்” என்று நாதருதளுக்க உணர்ச்சிமீதுர்ந்து பேசி நீதிமன்றத்தில் அழுதுவிட்டார்.

பாரதத்தில் கண்ணன் துரது சென்றபோது அவை எப்படி உணர்ச்சி பொங்க இருந்ததோ அப்படி இருந்தது நீதிமன்றம். 'துரியோதனாதியர் கூட்டம்’ என்று கைகாட்டிச் சுட்டியுரைத்தபோது சுப்பிரமணியம் உட்பட அவரைச் சார்ந்தவர்கள் யாவரும் திடீரெனக் கலைந்தனர். இதனை நீதிபதி நன்கு பார்த்துக் கொண்டார். உடனே நீதிபதி பிரதி வாதிகள் ஆகிய பொன்னுசாமி ரெட்டியார், கிருஷ்ணராஜு ரெட்டியார் ஆகிய இருவரையும் முன்னர் பிரசன்னமாகு

மாறு செய்து, அம்மையார் சவாலை ஏற்கின்றீர்களா? சத்தியம் செய்வீர்களா?' என்று கேட்டார். அதற்கு

அவர்கள் "நாங்கள் சத்தியம் செய்து தரமாட்டோம். நாங்கள் பணம் வாங்கவில்லை. மகனுக்கும் தாயாருக்கும் தகராறு. அந்தத் தகராறைத் தீர்த்து வைக்குமாறு எங்களை வேண்டினார்கள். நாங்கள் மறுக்கவே, எங்கள்மீது அபாண்டமாகப் பழிசுமத்தித் தொல்லை தருகின்றார்கள்.