பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நினைவுக் குமிழிகள்-2

எங்களிடமே பணம் தேவைக்கு மேல் உள்ளது. நாங்கள் கடன்வாங்க அவசியமே.இல்லை. அதுவும் இந்த அம்மாளைத் தேடிப்போய் வாங்க வேண்டிய அவசியமில்லை, வழக்கை விசாரணைக்கு வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறி விட்டார்கள், இது ஒரு சனிக்கிழமை நடந்தது. நீதிபதி திங்களன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக வாய்தா போட்டுவிட்டார்.

வேடிக்கை பார்க்க வந்தவர்களில் மிட்டாதார்களுக்கு விரோதிகளாக இருப்பவர்கள் என்னிடம் வந்து, 'மிட்டா தார்கள் கடன்காரர்கள். ரூ 100,-ரூ 50 ஆகக் கூடப் பலரிடம் வாங்கியுள்ளார்கள். யாரிடம் வாங்கலாம் என்று சதா எதிர் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்’’ என்று கூறி யார் யாரிடம் எவ்வளவு வாங்கியிருக்கின்றனர் என்பதற்குக் கொடுத்தவர் களின் பெயர் முகவரியுடன் ஒரு பட்டியலையும் தந்தார்கள். அதில் நாமக்கல்விலுள்ள ஒரு வட்டிக்கடையின் பெயரும் இருந்தது. நான் அவர்களை (சுமார் 20 பேர்) உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி, காப்பி அருந்தச் சொல்லி மாலை ஆறு மணி சினிமாவுக்கும் டிக்கெட் வாங்கித் தந்து பார்த்துவிட்டு ஊர் போய்ச் சேருமாறு சொல்லி அனுப்பினேன். "திங்களன்று வரட்டுமா?’ என்று கேட்க, அதற்கு நான், “அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும், நடைபெறும் என்று சொல்ல முடியாது. வாய்தாதான் விழும்' என்று சொல்வி அனுப்பி விட்டேன், - -

வக்கீல் வீரராகவ அய்யங்காருடன் கலந்து நாமக்கல் வட்டிக்கடையியில் உள்ள பொன்னுசாமி ரெட்டியாரின் கடன் விவரங்களைத் தெரிந்து கொண்டால் விசாரணைக்கு அனுகூலமாக இருக்குமா என்று கேட்க, அவரும் தன் வீட்டிற்கருகிலேயே அந்தக் கடை இருப்பதாகக் கூறி