பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{44 நினைவுக் குமிழிகள்-2

வேண்டியது: இரண்டு புரோநோட்டுகளையும் இராமசாமி ரெட்டியார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியது” என்பது. கையூட்டு தந்து பழக்கப்பட்ட என் மைத் துனர் இது கையூட்டினால் வழங்கப்பெற்ற தீர்ப்பு என நினைத்து மாவட்ட நீதிமன்றத்துக்குப் போக நாமக்கல் மன்றத்தை அனுமதி கேட்க, பணத்தைக் கட்டிவிட்டு அப்பீல் செய்ய லாம் என்று அனுமதி தந்தது நீதிமன்றம்.

சேலம் நீதிமன்றத்தில் அப்பீல்செய்தனர் பொன்னுசாமி ரெட்டியார் வகையறா. நான் வீரராகவ அய்யங்கார் பரிந் துரை பேரில் எம்.எஸ். விசயராகவாச்சாரியரை வக்கீலாக அமர்த்தினேன். பொன்னுசாமி ரெட்டியார் வகையறா எஸ்.விசயம் என்பாரை அமர்த்தினார்கள். இவர்கள் இருவரும் மாமன் மைத்துனர் முறையினர்: அக்காலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். இங்கும் வழக்கு எனக்குச் சாதகமாயிற்று. பின்னர் சேந்தமங்கலத்தில் ஒர் இஸ்லாமிய நாட்டு மருத்துவ |சின் துணைகொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முயன்றனர். இரண்டாவது அப்பீலுக்கு இடம் இல்லை என்று கூறி வழக்கு தொடுக்க அனுமதி இல்லாமல் போய்விட்டது. சேலத்தில் நான் அமர்த்திய வக்கீல் வருமானவரியைத் தவிர்ப்பதற்காக ரூ250 பீஸ்வாங்கி கொண்டு ரூ 100 க்குத்தான் சான்றிதழ் வழங்கினது டிக்கியிலிருந்து அறிந்தேன். இப்படிக் கட்சிக்காரர்கள் வழக்கறிஞர்களால் ஏமாற்றப்பெறுகின்றனர். நாட்டுப் புறத்து மக்களுக்கு நீதிமன்றத்தில், வக்கீல் அலுவலகத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதே தெரிவதில்லை. கேட்கும் போதெல்லாம் காமதேனுபோல் பீஸ் தந்து கொண்டே இருக்கின்றனர். என் தாயார் தொடுத்த வழக் கொன்றின் கட்டுவாங்கத் துறையூர் வக்கீல் அலுவலகத்திற்கு சென்றபோது வக்கீல்"ஏதாவது பீஸ்பாக்கி இருந்தால் அதை வாங்கிக்கொண்டு கட்டைத் தருமாறு பணித்தார்எழுத்தரை

...*