பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு முடிவுகள் - 145

எழுத்தர் நடேசன் என்பவர் துறையூரில் நான் (1930-31) எட்டாம் வகுப்பு படித்தபோது இவர் 7-வது வகுப்பு . படித்தார். அவர் "ஐம்பதி ரூபாய் அதிகப்பற்று உள்ளது' என்று கூறிக் கட்டை என்னிடம் தந்தார். இப்படி எத்த னையோ கட்சிக்காரர்கள் அதிகப் பணம் தந்து ஏமாறு கின்றனர்.

(2) என் மாமியார் துறையூர் நீதிமன்றத்தில் தொடுத்த வாழ்க்கைத் தேவை வழக்கில் ஆண்டொன்றுக்கு ரூ 360 தருமாறும் செலவுத் தொகையும் தருமாறும் தீர்ப்பு வழங்கப் பெற்றது. 1944 விருந்து 1952 வரையில் என் மாமியார் என்னோடு தங்கியிருந்த காலம் வரையில் (8 ஆண்டுகாலம்) 360 பெற்றனர். அதன் பிறகு மகனுடன் சேர்ந்து விட்ட தால் இது நின்றது. -

(3) நாமக்கல் நீதிமன்றத்தில் என் மைத்துனரின் முதல் மனைவி தொடுத்த வாழ்க்கைத் தேவை வழக்கில் ஆண்டொன்றுக்கு ரூ. 42ல் தருமாறு தீர்ப்பு ஆயிற்று. இத்தொகையை 1944 முதல் 1978 வரையில் (34 ஆண்டுகள்) பெற்று வந்தார். அதன்பிறகு ரு 4000 தந்து என் மைத்து னர் ஆண்டுதோறும் தரும் பொறுப்பினின்று தம்மை விடு வித்துக் கொண்டார். முதல் மனைவியும் 1980 ல் காலகதி அடைந்து விட்டார்கள். -

K. வீரராகவ அய்யங்கார் : இவரைப் பற்றிச் சில சொற்கள். நான் 1944 இல் இந்த வழக்கை நடத்தினபோதே இவர் அறுபதிற்கு மேற்பட்ட அகவையை யுடையவர். 1963இல் இவரது பேரர் (மகள் வயிற்றுப் பேரர்) திருப்ப திக்கு வந்தபோது (இவரும் வழக்கறிஞர்) பெரியவர் திரு நாடு அலங்கரித்துவிட்டார். எனக்கு நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களிடம் பழக்கம் உண்டு. ஒரு சிலரே தொழிகை

நி-10 .