பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நினைவுக் குமிழிகள்-2

தம் நேர்மையாலும் திறமையாலும் என் உள்ளத்தைக் கவர்த்தவர்கள். அவர்களில் ஒருவர் இவர். தந்தை தனய னிடம் வைத்திருக்கும் பாசத்தைப் போல என்னிடம் வைத் திருத்தவர். சிறந்த திருமால் பக்தர். பெரும்பாலும் நான் வழக்குவிஷயமாகப் போகும்போதெல்லாம் இவர்என்னுடன் ஒக்க உட்கார்த்து உண்ணாவிடினும் என்னைத் தன் இல்லத் தில் உண்ணும்படி வற்புறுத்தியவர். நான் உண்ணும் போது அருகில் அமர்ந்து விசாரிப்பார்.

எப்பொழுது நாமக்கல் வந்தாலும் சனிக்கிழமை காலை 5, 6 மணிக்குக் கிளம்பும் பேருந்தில்தான் வருவேன். பேருந்து பவித்திரம் ஏரிக்கரையின் வழியாகத்தான்வரும். சாலையின் மீது கந்தசாமி என்ற பெட்டிக்கடைக்காரர் வாணிகம் செய்து வந்தார். இவருக்கு நற்பெயர் உண்டு; பெரும் புகழுடன் திகழ்ந்தார். இவருடைய திருக்குமாரன் துறை யூரில் படித்தான்: நாள்தோறும் பேருந்தில் வந்து பேருந்தி லேயே திரும்புவான் (20 கல் தொலை). பவித்திரத்தில் சந்தை நடைபெறுவது புதன் கிழமையில், கொல்லி மலை வாழைப்பழம் பேர்போனது. ஒரு தாரில் 100 அல்லது 105 பழம் இருக்கும். காயாக இருக்கும்போது வாழை மட்டை களால் மூடப்பெற்று மலையிலிருந்து இறங்கும். மூடப் பெற்றுள்ள பாங்கே கலையுணர்வைத் தூண்டக்கூடியது. விலை ரூ 5 அல்லது ரூ. 61-க்கு மேல் போகாது.

சனிக்கிழமை நாமக்கல் பயணம் நேரிட்டால் செவ்வா பன்றே ஒரு தார் பழம் வாங்கி வைக்குமாறு கந்தசாமிக்கு அவருடைய மகன் மூலம் தகவல் அனுப்புவேன். அவர் தியாராக வைத்திருப்பார். சனிக்கிழமை அத்தாரை என்னிடம் சேர்ப்பார்; விலையைத் தந்து விடுவேன். இந்தத் இாரைத் திரு. வீரராகவ அய்யங்கார் வீட்டில் சேர்ப்பேன். அவர் மிக அன்பாக வாங்கிக் கொண்டு விலையைத் தர முயல் வார். மறுத்து விடுவேன். இப்படியாக நாமக்கல்லில் வழக்கு