பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்துடையாம்பட்டிச் சொத்து 147

நடைபெறும்போது வக்கீலுக்குப் பத்துத் தார்களாவது தந்திருப்பேன். இச்செயல் இன்றும் (1989) நினைவில் பசுமை யாக உள்ளது. வழக்கிலும் செலவுக்குமேல் சிறிதும் வாங்கிக் கொள்ளமாட்டார். கட்சிக்காரர்கள் கஷ்ட - நஷ்டங்களை நன்கு உணர்ந்த வழக்கறிஞர் இவர். இறையருள்தான் இத்தகைய நல்லோரிடம் தொடர்பு கொள்ளச் செய்தது என்றே நினைக்கின்றேன்.

குமிழி-84 20. ஆலத்துடையாம்பட்டிச் சொத்து

என் மாமியார் மூலம் என் மனைவிக்கு வந்த நில விவரத்தைக் குறிப்பிட்டு திரு. மு. கிருஷ்ணசாமி ரெட்டி யாருக்கு எழுதினேன். இவர் என் மனைவியின் அத்தை மகன். சிறுவயதில் இவரும் இவர் தமையன் மு. பெருமாள் ரெட்டியாரும் இளம்பிள்ளைவாதம் என்ற நோயால் தாக்கப் பெற்றுச் சரியாக நடக்க முடியாதவர்கள்; சற்றுத் தாங்கித் தாங்கி நடப்பவர்கள். பெரியவருக்குத்தான் நோயின் கொடுமை அதிகம். இவர் மானியாகவே வாழ்ந்து திருநாடு அலங்கரித்தவர். திருத்தம்பியார் சற்று நன்றாகவே நடப் பார். முப்பத்தைந்து அகவைக்குமேல் திருமணம் புரிந்து கொண்டவர்; திருமகன் ஒருவன் பிறந்து ஐந்தாண்டு எட்டு வதற்குமுன் பாலாரிஷ்ட்டத்தால் இறைவன் திருவடியை அடைந்து விட்டான். எண்பதற்குமேல் இன்னும் இவரும் இவர் துணைவியார் பொன்னம்மாளும் ரெட்டியார்பட்டி யில் குடியேறி அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

என் மைத்துனருக்குச் சொந்தமான வளமான மஞ்சள் மேட்டு நிலங்கள் இவர்மூலம் குத்தகைக்கு விடப்பெற்று நிர்வகிக்கப்பெற்று வந்தன. வானம் பொய்ப்பினும்