பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i48 நினைவுக் குமிழிகள்-2

கொல்லிமலையில் எப்படியோ மழைபெய்து ஆலத்துடை யாம் பட்டியில் இரண்டு ஏரிகளும் நிரம்பிவிடும். பயிர்கள் வளர்ச்சிக்கும் நெல் விளைச்சலுக்கும் குறைவில்லை. 150 மூட்டை நெல் குத்தகை தவறாது வந்துவிடும். பல்லாண்டு கனாக இந்த நிலங்களை நிர்வகித்து வந்தார். இனி, "ஒரம்பு வயல் இரண்டு ஏக்கர் குத்தகை எங்களைச் சேரவேண்டியது என்று எழுதினேன். இவருக்கு. 1946-47 முதல் 27 மூட்டை குத்தகை எங்கட்கு வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இதனைச் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துவ தில்லை, விற்றுவிடுவோம். ஆண்டு ஒன்றுக்கு 300-வருமானம் வந்து கொண்டிருந்தது.

இந்த வயலுக்குச் சிலசமயம் ஆற்றுப்பாசனம் இருக்கும். ஆனால் கிணற்று நீரை நம்பித்தான் சாகுபடி நடைபெற வேண்டும். தண்ணிருக்குக் குறை இராது. எவரும் இந்த நிலத்தைக் குத்தகைக்கு ஒப்புக் கொள்ளத் தயங்கார். இந்த நிலத்திற்கு உரிய தனிக் கிணற்றின் நாற்புறக் கல்கட்டு இடிந்து சரிந்து விட்டது; இதனால் தண்ணீரின் அளவு குறைந்தது. இதை வந்து பார்க்குமாறு திரு. கிருஷ்ணசாமி ரெட்டியார் எழுதினார். துறையூரிலிருந்தபோது ஒரு சனி - ஞாயிறு சென்று பார்க்கத் திட்டமிட்டு ஆலத்துடையாம் பட்டி சென்றேன். சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊருக்கு அக்காலத்தில் பேருந்து வசதிகள் இல்லை. மிதி வண்டியில்தான் நான் சென்று வருவது வழக்கம்.

இந்த ஒரம்பு வயல் ஊரிலிருந்து மூன்று கல் தொலைவி விருந்தது. நான் மிதி வண்டியில் செல்ல முடியுமா யினும், கிருஷ்ணசாமி ரெட்டியாரால் அவ்வளவு தொலைவு நடந்து சென்று திரும்ப முடியாது. இதனால் ஓர் ஒற்றை மாட்டு வண்டி ஏற்பாடு செய்யப்பெற்றது. மூர்க்கத்தனமான இளங்