பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நினைவுக் குமிழிகள்-2

விட்டது. இப்பொழுது 85 அகவையைத் தாண்டிவிட்டதால் கோலூன்றி நடக்கின்றார். இவரைவிடச் சுமார் 20 வயது குறைவுடைய இவரது துணைவிக்குக் கண் பார்வை போய் விட்டது. தன்னை முதுமைக் காலத்தில் கவனிக்க வேண்டிய நிலைமாறி தான் துணைவியைக் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது கர்ம பலன் என்றே சொல்ல வேண்டும். சொத்து முழுவதையும் (சுமார் 20 ஆயிரம் மதிப்புடையது) நெருங்கிய உறவினரிடம் தந்து விட்டார். அவர்கள் இவரை நன்கு கண்ணித்து அன்புடனும் பாசத்துடனும் பராமரிக்கின்றனர். சில ஆண்டுகட்கு முன்னர் இவர் மனைவியும் இறந்து விட்டாள்.

ஒரு திங்கள் கழித்து மீண்டும் ஆலத்துடையாம்பட்டி சென்று திலத்தைப் பார்வை இட்டேன். இருந்த கற்களை யும் புதியனவாக வாங்கிய கற்களையும் கொண்டு சீமைக் காரை (Cement)யைப் பயன்படுத்திப் பலமாக நாற்புறக் கல் கட்டையும் கட்டி விட்டேன். இனி கல்கட்டு சரிந்து விழாது. 1200). செலவு ஆயிற்று என்பதாக நினைவு. இப்பொழுது இதே பணியைச் செய்ய வேண்டுமானால் 10 ஆயிரத்திற்கு மேலாகும். இந்த நிலத்தை 1976இல் பதினாறு ஆயிரத்திற்கு விற்றுவிட்டோம். குத்தகை நெல் அளவில் மாறுபாடு இல்லையாயினும் 1946இல் ரு 300). வீதம் வந்த குத்தகை படிப்படியாக பணவீக்கத்தினால் மதிப்பு அதிகமாகி 1970க்கு மேல் கு 2500-ஐ எட்டி ரூ 2800 வரையிலும் கிடைத்தது.