பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் 15t

குமிழி-85 21. வக்கீல் அரங்கசாமி ரெட்டியார்

P. அரங்கசாமி ரெட்டியார் என் கல்லூரி வாழ்வி லிருந்தே அறிமுகமாகி நெருங்கிய நண்பரானவர்.என்னுடைய தலை எழுத்துப்படி ஆசிரியப் பணியில் அமர்ந்தேன். இறுதி வரை கற்புடைய மனைவி கணவனே தெய்வம்’ என்று நம்பி வாழ்வதைப்போல், நானும் மேற்கொண்ட பணியை தெய்வப் பணியாகவே கருதி ஒய்வு பெறும் வரையில் இதே பணியிலிருந்து ஒய்வு பெற்றேன். வக்கற்றவனுக்கு வாத்தி' என்பது உலகப் பழமொழி, தெலுங்கிலும், இன்சிபெட்டின வாரிக்கு இஞ்சினியரிங் டிபார்ட்மெண்டு; ஏமி லேதிவாரிக்கி எட்யூகேஷன் டிபார்ட்மெண்டு (கொடுத்து வைத்தவனுக்குப் பொறியியல்துறை ஒன்றுமில்லாதவனுக்கு உபாத்திமைத் துறை) என்பது தெலுங்கு நாட்டில் வழக்கிலுள்ள பழமொழி. இறையருளால் வாழ்விலும் தாழ்விலும் மனம் தளராமல், சோர்வுறாமல் என்னால்இயன்றவரை இப்பணியை மனநிறை வுடன் தெய்வப் பணியாகவே கருதி வந்திருக்கின்றேன். எந்த நிலையிலும் பணியே என் குறிக்கோளாக இருந்ததேயன்றி பணம் அன்று என்பதை இன்று நினைவு கூர்கின்றேன். ஒய்வு பெற்றபிறகு என்னை வளர்த்த தமிழன்னையின் மேன்மைக் கும் பெருமைக்குமாக உழைத்து வருகின்றேன் என்பதற்கு என் பலதுறை நூல்களைப் படிப்போரே சான்றாளர்களாவர்.

. P. அரங்கசாமி ரெட்டியார் 1941இல் ஜூன் மாதத்தில் (நான் பணியேற்ற அதே ஆண்டு, அதே மாதம்) வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். ஓராண்டுத் திருச்சி கணபதி அய்யரிடம் தொழில் பழகிக் கொண்டார். மிகுபுகழ் கணபதி அய்யரிடம் பழகியதால் சட்ட துணுக்கம், வழக்குகளை நீதிபதிகட்கு முன் பேசும் சாதுர்யம் நேர்மை முதலியவை