பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் 153

எனக்கு நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பழக்கமான வர்கள். ஆனால் தொழிலில் நேர்மையுடன் நடந்து கொள்ளும் இவரைப்போல் மற்றொருவரைக் காண்டல் அரிது. எழுத்தருக்கு மாதச் சம்பளமாக ரூ. 30 உம் ஒரு கலம் நெல்லும் தந்தார். எந்த வழக்கறிஞர் அலுவலகத் திலும் ரூ. 10க்கு மேல் மாதச் சம்பளம் தருவதில்லை. இவர் அலுவலக எழுத்தருக்குப் பல்வேறுவித எழுத்து வகைகட்கு (வழக்கு பிராது, டிக்ரி நிறைவேற்றல் மனு, சாட்சி சம்மன் அனுப்புதல் போன்றவை) இவ்வளவுதான் வாங்க வேண்டும்: இதற்குமேல் கட்சிக்காரர்களைத் தொந்தரவு செய்து அதிக மாக வாங்கக் கூடாது" என்பது இவர்தம் கட்டளை. அக் காலத்தில் இவர் தந்த சம்பளம் அரசு அலுவலகத்தில் எழுத்தருக்குக் கிடைத்த சம்பளத்திற்குச் சமமாகும். வக்கீல் அலுவலக எழுத்தர்கட்கு எட்டாவது (மூன்றாவது படிவம்) படித்திருந்தால் போதும். ஐந்தாவதுவரை படித்த வர்களே பெரும்பாலோர் இப்பணிகளை அநுபவத்தால் செய்து வந்தனர். வேறு வக்கீல் அலுவலகங்களில் பணி யாற்றுவோருக்கு இந்தவித நிபந்தனைகள் இல்லை. கட்சிக் காரர்களிடம் கறக்கிற வரை கறந்து கொள்ளலாம்.'

தொடக்கக் காலத்தில் சில ஆண்டுகள் நீதிமன்றத் திற்கு வந்துபோக மிதிவண்டிதான் இவருக்கு ஊர்தி யாக இருந்தது. டென்னிஸ் விளையாடுவதற்கும் போய்வர இதே வாகனந்தான் பயன்பட்டது. நான்கைந்து ஆண்டு கள் கழிந்ததும் பன்னிரண்டு ஆபிரத்திற்கு ஹில்மென்' (Hilman) stár p io£}a|#3 (Plaasure car) autêâ அதைத் தான் வாகனமாகப் பயன்படுத்தினார். துறையூரில் யாரோ ஒர் அம்மையாருக்கு இந்த மகிழ்வுந்து பரிசுச்சீட்டில் முதல் பரிசாக விழுந்தது; அதை விலைகொடுத்து வாங்கிக்