பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi

களும் தாம் மேற்கொண்ட பணியைத் தெய்வப் பணியாகல் கருதி ஒய்வுபெறும் வரையில் அதே ஆசிரியப் பணியில் ஈடு பட்டிருந்தார். குறைந்த சம்பளத்திலும், இடர்ப்பாடுகள் நிறைந்த நிலையிலும் துறையூர்ப் பள்ளியில் அவர் தொடர்ந்து தலைமையாகிரியராகப் பணியாற்றியதற்கு அவர் பணியில் கொண்டிருந்த மன நிறைவுதான் (job satistaction) காரணமாகும். இத்தகைய பணியிலான மன நிறைவு யாவருக்கும் வாய்ப்பதில்லை. அதிகாரங்களோ, உயர்ந்த சம்பளமோ, வேறு வகையிலான ஆதாயங்களோ உள்ளபடியான மன நிறைவினை அளிப்பதில்லை. அவை யாவும் வெளித் தோற்றங்களே. இதனை அறிந்து வாழ்வோர் மிகச்சிலரே. தன் முயற்சி விளம்பரங்கள், வெற்றி ஆரவாரங் கள், ஈனச் செயல் புரிந்தேனும் தான் முந்தியிருப்பதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றில் முனைந்து உள்ளமும் வாக்கும் புளியம் பழமும் ஒடும் போல வாழ்வார் தொகை பெருகி வரும் இந்நாளில், பேராசிரியர் அவர்கள் அமைதியான முறையில்-ஆரவாரமற்ற தன்மையில் மறைந்த டாக்டர். மு.வ. அவர்களைப் போன்று-எழுத்துப் பணிமூலம் அருந் தொண்டாற்றி வருவது சிறப்புக்குரியதாகும்.

பேராசிரியர் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வர என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தம் அறிவுத்திறனும், அநுபவமும இன்றைய த்லை முறையினர்க்கு ஏற்றவாறு பயன்பட அவர்கள் மேலும் சீரிய நூல்களை வடித்துத் தர வேண்டும் என்ற விருப்ப்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

"குறளகம்' ஆ. பன்னீர்செல்வம் சென்னை-600 108, . 31-12–1989 ༣༣