பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் I6?

1952 பொதுத்தேர்தல் : பதினோர் ஆண்டு வக்கீல் வாழ்வில் பொது மக்களிடம் நல்ல பேர் வாங்கிவிட்டார். சாதிவெறி இல்லாமல் எல்லாச் சாதியாரிடமும் நன்கு பழகி புகழ் பெற்றிருந்தார். தந்தை பெரியாரிடம் நெருக்கமாகப் பழகுபவர்; இதனால் மூடப்பழக்கங்களைக் கடிவதில் பெரியாருக்குத் துணையாக இருந்தார். அக்காலத்தில் திருச்சி (தென்னுரர்) வேதாசலம் பிள்ளையவர்களும் இத்தகையவரே. இவரிடமும் நன்கு பழகியுள்ளேன். (மாணவராக இருந்தது முதல்) இவரும் அரங்கசாமி ரெட்டி யாருக்கு நெருங்கிய நண்பர். இங்ஙனம் துறையூர், பெரம்ப லூர், இலால்குடி, முசிறி வட்டாரங்களில் பெரும் புகழுடன் திகழ்ந்த அரங்கசாமிரெட்டியார் சட்டமன்ற பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். இவர் காலத்தில் பல்வேறு சமூகப் பிரச்சினை யைத் தீர்மானங்கள் மூலமாகவும் கேள்விகள் மூலமாகவும் அரசுக் கவனத்திற்குக் கொணர்ந்து அவற்றிற்குத் தீர்வு கண்டார். அவற்றையெல்லாம் இப்போது நினைவு கூர முடியவில்லை. பெரும்பாலும் கோவாப்பரேட்டிவ் நிறுவ னங்களிலுள்ள ஊழல்களை அம்பலப்படுத்தினார் என்பது மட்டிலும் நினவுகூர முடிகின்றது. நம் அருமை மிகு இராஜாஜி முதல் அமைச்சராக இருந்தமையால் பெரும் பாலான பிரச்சினைகட்கு உடனுக்குடன் தீர்வு காண முடிந்தது என்பதைப் பெருமையுடன் சொல்லிச் சொல்லி மகிழ்வார். 1950க்கு மேல் திருச்சியில் தில்லை நகரில் சொந்த வீடு அமைத்துக் கொண்டு வக்கீல் தொழிலைத் திருச்சியிலும் துறையூரிலுமாக வைத்துக் கொண்டார். துறையூர் இல்லத்தில் அவர் அன்னையார் மட்டிலும் தனியாக இருந்து வந்தார்கள். பிள்ளைகள் நால்வரும் மாணாக்கர்விடுதிகளில் தங்கியே தங்கள் கல்வியை முடித்துக் கொண்டார்கள். எல்லோருமே பட்டப்படிப்பை முடித்துக்

நி-11