பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் 163

எப்படியோ அறிந்து கொண்டார். இந்தக் காவல் துறைத் தலைவர்மீது பொதுமக்களால் சாட்டப்பெற்ற குற்றச்சாட்டு கள் ஏராளமாக இருந்தன. கையூட்டு, பெண்கள் நேசம், அடாவடித்தனமான செயல்கள், அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துதல் போன்றவை சில. இவற்றுள் தலையாய செயல் ஓர் துணை ஆய்வாளரின் (Sub-Inspector) துணைவியாரைக் கெடுக்க முயன்றது. புதியவராகத் துறை யில் சேர்ந்த இவரை ஒரு பந்தோபஸ்து வேலையாக தொலைவிடத்திற்கு அனுப்பிவிட்டு இலால்குடிக்கருகிலுள்ள வாளாடி (?) என்ற சிற்றுாரில் தந்தையாருடன் இருந்துவந்த அவர் துணைவியை நெருங்க முயன்றதில் அவர்தம் தோட்டத்து வேலையாட்கள் நையப் புடைத்துப் பாடங் கற்பித்தனர். மேலிடத்திற்கும் புகார் செய்தனர். இந்தப் பாடம் இவருக்குப் போதவில்லை.

ஒருநாள் அரங்கசாமி ரெட்டியாருக்கு ஒரு சிறு துண்டுத் தாள் கிடைத்தது. அஃது ஒரு காவல்துறை சேவகனால் தான் கிடைத்தது. அதில் மாவட்டக் காவல்துறைத் தலைவர் (DSP) ஏதோ ஒரு காரணம் காட்டி சட்டமன்ற உறுப்பினரைக் கட்டுப்படுத்தி உள்ளே தள்ளு என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். அது வட்ட ஆய்வாளர் கைக்குப் போக வேண்டியது; தவறியதுபோல் காட்டிக் காவல் துறை யினர் இவர் கைக்குக் கிட்டச் செய்தனர். மாவட்டக் காவல் துறையினர் பெரும்பாலோர் தம் தலைவரின் அடாத செயல் களை, தான்தோன்றித்தனமான போக்கை, விரும்பவில்லை. ஆதலால் அரங்கசாமி ரெட்டியாரைக் கருவியாகக் கொண்டு தான் இவரை ஒழித்துக் கட்டவேண்டும் என்று கருதித் துண்டுக் காகிதத்தை இவர் கைக்குக் கிட்டச்செய்தனர்.

மாலை நாலரை மணி சுமாருக்கு டென்னிஸ் விளையாடு வதற்குப் போய் கொண்டிருந்த சமயத்தில்தான் இக்காகிதம்