பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நினைவுக் குமிழிகள்

கிடைத்தது. உடனே மகிழ்வுந்தை வீட்டிற்குத் திருப்பிக் கொண்டு வந்து மூன்று நான்கு நாட்களுக்குத் தேவையான ஆடைகளை எடுத்துக் கொண்டு திருச்சி சென்று அன்றிரவே சென்னை செல்லும் இருப்பூர்தியில் ஏறி மறுநாள் சென்னை வந்தடைந்தார். காவல்துறைப் பெருந்தலைவரைச் சந்தித்து விஷயத்தை விளக்கி விண்ணப்பம் செய்தார். சட்டமன்ற உறுப்பினரல்லவா? எந்தவிதத் தடையுமின்றி மாவட்டக் காவல்துறைத் தலைவரைத் (DSP) தற்காலிக வேலை நீக்கம் செய்தார் பெருந் தலைவர். மாவட்டக் காவல்துறைத் தலைவர் இராவண வீழ்ச்சியை யடைந்தார். இராவணன் வீழ்ச்சியைக் கம்பநாடன்,

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்

துரக்க நல்லருள் துறந்தனள் துமொழி மடமான்

இரக்க மின்மையும்’

என்று காரணம் காட்டி விளக்குவான். சனகி எனும் பெரு தஞ்சு உன்னைக், கண்ணாலே போக்கியதே உயிர் நீயும் களப் பட்டயோ' என்று இராவணன் மாண்ட செய்தியை தினைந்து மண்டோதிரி புலம்புவாள். இந்த நிலையை மாவட்டக் காவல்துறைத் தலைவருடைய நிலைக்கு ஒப்பிட லாம். சீதையைத் தொடாமலேயே மடிந்தான் இராவணன். உதவி ஆய்வாளரின் துணைவிமேல் வைத்த ஆசையே அரங்க சாமி ரெட்டியாரின் செயற்பாட்டாக நின்று பதவிநீக்கத் திற்குக் காரணமாயிற்று. -

நான் அப்பொழுது காரைக்குடியில் பணியாற்றி வந்தேன். சென்னைப் பல்கலைக் சழகப் பேரவை உறுப்பின

2. அயோத், மந்தை சூழ்ச்சி-78

3; யுத்த இராவணன்வ்தை-220