பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலமுகம்

அறிவிலே தெளிவு நெஞ்சிலே யுறுதி,

அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிக ளின்மீது தனியர சாணை,

பொழுதெலா நினதுபே ரருளின் தெறியிலே நாட்டம் கருமயோ கத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய், குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே."

. -பாரதியார்

6ጽ ம்பெருமான் ஏழுமலை:ான் கருணை வெள்ளம் கோத்து என்னைச் சூழ்வதால் இச்சிறியேனின் உயர்நிலைப் பள்ளிக் கல்விப்பணி நினைவுக்குமிழிகள்-2 என்ற தலைப்பில் இலக்கியமாகின்றது. நாடு விடுதலை பெறுவதற்குமுன் நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்திலையில் துறையூரில் பெருநிலக் கிழவர் ஆதரவில் உயர்நிலைப் பள்ளி ஒன்று தொடங்கப் பெற்றது. பள்ளி தொடங்கப்பெற்ற ஆண்டும் என் ஆசிரியப் பயிற்சி நிறைவு பெற்று (சைதை ஆசிரியர் கல்லூரியில்) நான் என்.டி. பட்டல் பெற்ற ஆண்டும் மிாதம் நாள் உட்பட ஒன்றாக அமைந்தன. இறைவன் திருவுளக் குறிப்பில் பள்ளியின் முதல் தலைமிைங்ாசிரியர் பத்வி எனக்கென்றே அமைந்தது. தெய்வத்தின் கட்டளைப் படி நான் அப்பதவியில் அமர்ந்தேன். கீதையின் கருத்துப்படி ஆசிரியப் பணி என் சுதர்மமாக அமைந்தது. இப்பணியி விருந்து கொண்டே மேலும் மேலும் கற்றேன். கற்ற்னைத்து ஊறும் அறிவு" என்பது வள்ளுவம் அல்லவா? இதனால் என் தகுதியும் திறமையும் வளர்ந்தன. வளர்ச்சிக்கேற்றபடி பணி பிட்ங்களும் பணியின் போக்கும் மாறிமாறி அம்ைந்தன. ஆனால் சுதர்மம் மாறாமலே இருந்தது இறைவனின் திருவுளக் குறிப்பாகும். -

இங்கனம் இறையருளால் என் நீண்ட வாழ்க்கையில், ஒரு சமயம் என் அரிய நண்பர் பேராசிரியர் டாக்டர்

3. பாரதியார் கவிதைகள்-சுயசரிதை.49 -B

%