பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுக் குமிழிகள்-2

குமிழி -86

166

22. நிலச் சீர்திருத்தம்

பள்ளிக்கெனப் பத்து ஏக்கர் நிலம் வாங்கப் பட்டதை தான் முன்னர்க் குறிப்பிட்டேன் அல்லவா? இந்த நிலம் தென்-வடல் நீளமாகவும், கீழ்-மேல் சற்று நீளக்குறை வாகவும் இருந்தது. சாலையிலிருந்து இந்த நிலத்திற்கு வருவது குறுக்குவழிதான். நான் துறையூரிலிருந்தவரை (ஜூன் 1950) இந்த நிலப்பகுதிக்கு நேரான வழி குறிக்கப் பெறவில்லை. பல்வேறு சமயங்கள் இறைவனை அடையப் பல்வேறு வழிகளைக் காட்டுவனபோல், பலரும் இப்பகுதிக்கு வருவதற்கு பல வழிகளை ஏற்படுத்திக் கொண்டனர். இப் போது (செப்டம்பர் 1989) பல ஆண்டுகட்கு முன்னரே வழி அறுதி செய்யப் பெற்றிருப்பதை அறிகின்றேன்.

இந்த நிலத்தின் வடபுறம், மேற்புறம் கட்டாந்தரை போல் அமைந்திருந்தன. கீழ்ப்புறமும் தென்புறமும் வேளாண்மைக்குகந்த நிலமாக இருந்தன. இந்த நிலத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று என் மனம் சிந்திக்கத் தொடங்கியது, மேல் புறம் சாலைக்கு அருகிலிருந்ததால் அப்பகுதியில் பின்னர் பள்ளிக்கு அடைய வேண்டிய நிரந்தரக் கட்டடத்திற்கென ஒதுக்கத் தீர்மானித்தேன். இத்திட்டத் தில் நிலத்தின் மேற்புறமாகக் கட்டடம் அமைந்தால், கட்டடத்திற்குப் பின் புறமாக ஆடுகளம் (Play-ground) அமையும். இத்திட்டத்தைத் தாளாளர் சின்னதுரை முன் வைத்தேன். அவரும் திட்டத்தை ஒப்புக் கொண்டார். இனி செயற்பட வேண்டியது என் பொறுப்பில் வந்தது, வடப்புறப் பகுதியின் கீழ்க்கோடியில் கூடைப்பந்து ஆடுகளனுக்காகவும், அதன் அருகில் பூப்பந்து ஆடுவதற்கு இரண்டு களன்களுக் காகவும் நிலத்தை ஒதுக்கிக் கொண்டேன்.