பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் இல்லம்-தோற்றம் 171

வரும்படி வேண்டினேன்; இவரும் இதற்கு ஒப்புக்கொண் டார். இவரும் சமையல் பாத்திரங்கள் வாங்குவதில் நல்ல அநுபவம் உள்ளவர். -

இவர்கள் இருவரும் திருச்சி சென்றனர். அக்காலத்தில் திருச்சிப் பேருந்துநிலையம் சின்னையா பிள்ளை சத்திரத் திற்கருகிலுள்ள பட்டர்வொர்த் சாலையில் இருந்தது. இருவரும் அரட்டை அடிப்பதில் கைதேர்ந்தவர்கள். தமாஷாகப் பேசிக்கொண்டே பேருந்தைவிட்டு இறங்கி ஒரு பெட்டிக்கடையில் சிறுசுருட்டு, வெற்றிலைபாக்கு வாங்கினர். இவர்களுள் திரு சப்தரிஷிரெட்டியார் விடாமல் புகைப்பவர், திரு உமாபதி ரெட்டியார் ஓயாமல் வெற்றிலை பாக்கு மெல்லுபவர். இவற்றைச் செய்துகொண்டும் பேசிக் கொண்டும் நின்றவர்கள் 1000/- கொண்ட தோலாலான கைப்பையைப் பெட்டிக்கடையில் வைத்தனர். வைத்தவர் கள் அதை எடுக்க மறந்து பேசிக்கொண்டே போய்விட்டனர். 15 நிமிடம் கழித்து தோல்பையைக் காணாது விழித்தனர். பெட்டிக்கடையில்தான் வைத்திருக்கவேண்டும் என்ற நினைவுடன் பெட்டிக்கடையில் வந்து கேட்க, கடைக்காரன் தனக்கு ஒன்றுந் தெரியாது என்று கையை விரித்து விட்டான்.

இருவருக்கும் திகில் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் தம்பித்து நின்றனர். ஆயினும், உமாபதி ரெட்டியார் கடைக்காரனையும் கடையையும் நோட்டம் விட்டார். கடைக்காரனது இடதுபக்கத்தில் ஒரு பிள்ளையார் படம் சாய்வான நிலையில் மாட்டப்பெற்றிருந்தது. கடைக் காரன் "திருட்டுவிழி விழித்தான். வாளா நின்றுகொண்டி ருந்த சப்தரிஷி ரெட்டியார்கண்ணில் பிள்ளையார் படத்தின் பின்புறமாக வைக்கப்பெற்றிருந்த தோல்பை தென்பட்டு விட்டது. இதோ பை பிள்ளையார் படத்தின் பின்புறத்தில்’