பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நினைவுக் குமிழிகள்-2

என்று சொல்விக்கொண்டே வேகமாகப் பையை எடுத்துக் கொண்டார். பையில் வைக்கப்பெற்றிருந்த i-16öğrih அப்படியே இருந்தது எப்படியோ கடைக்காரனது செயலை பிள்ளையார் காட்டிக் கொடுத்துவிட்டார். இவர் சாதாரண பிள்ளையார் அல்லர்; உச்சிப்பிள்ளையார். குன்றின்ம்ேவி ருந்து கொண்டு எது எங்கே நடக்கின்றது?’ என்று நோட்டம் விடுபவர் அல்லவா? இருவரும் மகிழ்ச்சியுடன் திரும்பினர். கடைக்காரன் முகத்தில் ஈஆடவில்லை!

இருவரும் கடைத்தெரு சென்று தேவையான சாமான் களை வாங்கிக் கோணிப்பைகளில் போட்டுக் கட்டிக்கொண்டு துறையூர் திரும்பினர். ஒன்றிரண்டு நாட்களில் தேவை யான பாத்திரங்கட்கு ஈயம் பூசப்பெற்றது ரூ. 50/- மாத வாடகைக்கு வீடு பேசப்பெற்றது. தம்பு மாதச் சம்பளம் ரூ. 251க்கு ஒப்புக்கொண்டான். பாத்திரங்கள் தேய்க்கவும் அறைகள் பெருக்கவும் ரூ. 15l- ரூபாயில் ஆயா ஒருத்தி நியமிக்கப்பெற்றாள். ஒரே வாரத்தில் மாணவர் இல்லம், செயற்படத் தொடங்கியது. தொடக்கத்திலேயே முப்பது மானவர்கள் சேர்ந்துவிட்டனர். இது அக்காலத்தில் எங்கட்குப் பெரிய சாதனை. எல்லாப் பொறுப்புகளையும் திரு. வி.சி. கிருஷ்ணசாமி ரெட்டியார் தன்மீது சுமத்திக் கொண்டு மிகத் திறம்பட நடத்தி வந்தார். மாணவர்களின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மகிழ்ந்தனர்.

நீந்தத் தெரிந்தவர்கள் ஏரிக்கரை அருகிலுள்ள கிணறு களில் நீராடிவிட்டுக் காலை ஏழுமனிக்குள் திரும்பிவிட வேண்டும். நீந்தத் தெரியாத சிறுவர்கள் இல்லத்திலேயே நீர் இறைத்துக் குளிக்கவேண்டும், குளியல் ஏழுமணிக்குள் முடியவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப் பெற்றன. ஏழரை மணியிலிருந்து 9.15 வரையில் படிக்கவேண்டும், வீட்டு வேலைகள் செய்யவேண்டும் என்று திட்டமிடப்