பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii

க. அன்பழகன் (கல்வியமைச்சர்) ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் "மிஸ்டர் சுப்பு, உங்கள் புறவளர்ச்சி குன்றியதாகக் தோன்றி னும் உங்கள் அகவளர்ச்சி இமயம்போல் வளர்ந்திருப்பதை யான் காண்கின்றேன்’ என்று கூறியதை உன்னுகின்றேன்: மகிழ்கின்றேன். இந்நிலையில்,

ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை அணிமாயை விளக்கறையில்

அமர்த்தி அறி வளித்து நீணவமாம் தத்துவப்பொன்

மாடமிசை ஏற்றி நிறைந்தஅருள் அழுதளித்து நித்தமுற'வளர்த்து மானுறஎல் லாநலமும்

கொடுத்துலகம் அறிய மணிமுடியும் சூட்டியன்ை

வாழ்முதலாம் பதியே ஏணுறுசிற் சபையிடத்தும்

பொற்சபையின் இடத்தும் இலங்குநடத் தரசேனன்

இசையும் அணிந் தருளே."

என்ற அருட்பிரகாச வள்ளலாரின் திருவாக்கும் நினைவில் குமிழியிடுகின்றது, பணியிலிருந்து ஒய்வுபெற்ற நிலையிலும் ஆய்வுப் பணியில் ஊக்கத்துடன் கற்பதிலும் கற்ற அறிவின் ஒளியில் எழுதுவதிலும் ஈடுபடுத்திய கருணாநிதியாகிய இறைவனின் கருணைப்பெருக்கினை எண்ணி எண்ணிக் களிக் கின்றேன். சிறியேனின் வரலாறு தன்வரலாறு இலக்கியமாக மலர்ந்தது அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங் கருணை யினாலாகும்.

என் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி (இரண்டாம் பகுதி) வெளிவருமா? என்று எண்ணித் தவித்துக் கொண் டிருந்த நிலையில் எம்பெருமாளின் கருணையினால் கருணா நிதியின் தமிழக அரசு சிறிது நிதி உதவியது. முட்டுவழியில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லையாயினும் இறையருளால் நூல் வெளிவருகின்றது. கினைவுக்குமிழிகள்-2 என்ற இந்

4. திருவருட்பா - ஆறாம்திருமுறை - அருள்விளக்க

மாலை-77. - -