பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவுகள் 177

மாணாக்கர்கட்கு அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பெ ரும் பாலு ம் இக்கூட்டத்திற்கு உள்ளுர் மாவட்ட நீதிபதிகள் தலைவர்களாக அமைவார்கள் அப்படி அமைந்தவர்களில் திருவாளர்களான சாரங்கபாணி, பழநிசாமிக்கவுண்டர் தஜ முல் ஹூசேன், சுந்தரராம அய்யர், இராமநுஜம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அக்காலத்தில் தமிழ் ஆர்வலர், கே. எஸ். முத்துவேல் பிள்ளை என்பவர் இலங்கைத் தொழிலாளர் ஆணையத்திற்கு (Ceylon Labour Commission) gagaiwu-mas QCŞāāstrī. Passporujib என்னுடன் பயின்று துறையூரில் வழக்குரைஞராக இருந்த பா. அரங்கசாமி ரெட்டியாரையும் அடிக்கடிப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. வெளியூசிலிருந்து அடிக்கடி வந்து பல்வேறு கூட்டங்களில் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர்களில் லால்குடி நடேச முதலியார், வீ. உலக ஊழியர், பு. ரா. புருடோத்தம நாயுடு, அ. சாம்பசிவ ரெட்டியார், சி. இலக்கு வனார் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் என் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒருமுறை என் பள்ளிக்கு வந்து அக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேசிய ஆற்றோரம்’ என்ற தலைப்பி லேயே பேசினார். துறையூர்ப் பெருமக்கள் பெருந்திரளாக வந்து கூடி அண்ணாவைக் கெளரவித்ததுடன் பேச்சில் திளைத்து மகிழ்ந்தார்கள்.

அடிக்கடி வருபவர் வீ. உலக ஊழியனார் அவர்கள். நாமக்கல் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய போதும், சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரியில் திரு. இராமசாமிக் கவுண்டர் முதல்வராக இருந்த காலத்தில் பணியாற்றிய போதும் இவரை அடிக்கடி வரவழைத்துப் பேச வாய்ப்புகள் தந்தேன். இவருடைய வெண்கலக் குரலையும், பாடல்கள்ை

நி-12