பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

178 நினைவுக் குமிழிகள்-2

இசையாகப் பாடுவதையும் மாணாக்கர்களும் ஊர்ப் பெரு மக்களும் அதிகமாக விரும்பிச் சுவைப்பார்கள். இதனால்

இவரைக் கொண்டு மாலை நேரங்களில் ஒலிபெருக்கி அமைப்

புடன் பொதுமக்களுக்கென்று பலமுறை இலக்கியச் சொற் பொழிவுகளை அமைப்பதுண்டு. அச்சிட்டு சிறு அறிவிப்பு களைக் கடைத்தெருவிலும் பிற இடங்களிலும் பரப்புவதால்

பெருங்கூட்டம் திரளும். பெரும்பாலும் உலக ஊழியரின்

பேச்சு கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க

இலக்கியங்கள் இவற்றையொட்டியே அமையும்.

ஒரு சமயம் தறையூர் இச்சி மரத்தடியில் பேசியபேச்சு இன்னும் என் மனத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நாற்பது ஆண்டுகட்கு முன்னர் பேசிய பேச்சு இன்னும் பசுமையாக என் நினைவிலுள்ளது. கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தசரதனிடம் முன்னர் தருவதாகக் கூறிய இரண்டு வரங்களைக் கேட்கின்றாள் கைகேயி. எப்போது கேட்கின்றாள்? இராமனுக்கு முடிசூட்ட உறுதி செய்யப் பெற்றபோது. -

ஏய வரங்கள் இரண்டின்

ஒன்றி னால்என் சேயுல காள்வது; சீதை கேள்வன் ஒன்றால் போய்வன மாள்வது" என்பது அவள் கேட்டவரங்கள். கைகேயின் அந்தப்புரம் சோகக்களை தட்டுகின்றது. எவ்வளவோ அரசன் மன்றாடி யும் கைகேயி பிடிவாதத்தை விடுபவளாக இல்லை. அரசன் அவள் காலில் விழுந்து கெஞ்சியும் அவளது மனம் இரங்க வில்லை. அந்தப்புரத்தின் சூழ்நிலை பயங்கரமாக இருந்தது. இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தைக் கவிஞர் கூறும்

1. அயோ. கைகேயி சூழ்வினை-10