பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவுகள் 179

போது நம் மனமும் துக்கத்தில் மூழ்கிக்கிடக்கின்றது. விடியற் காலை வருகின்றது. கைகேயியை அரசன் திருமணம் செய்து கொண்ட நாள்முதல் சக்கரவர்த்திக்கும் இவளுக்கும் உடல் வேறு, உயிர் ஒன்று என்று சொல்லுமாறு இருவரும் மன மொத்து ஒருவரே நினைந்து செய்தாற்போன்ற பல செயல் கள் நடைபெற்று வந்தன. ஆனால் இன்று கணவன் துன்பம் எய்த, கைகேயி இரக்கமற்ற வன்நெஞ்ச முடையவளாகின் றாள். இதனைக் கண்ட இரவாகிய நங்கை ஆடவர் முன் நிற்கவும் நாணமுற்றவள்போல் ஏகுகின்றாள். இவ்வாறு இரவு கழிதலைக் கூறும் கவிஞர், கோழி கூவினால் விடியும்’ என்று உலகோர் நம்பும் மரபையொட்டி கோழி கூவுதலை வருணிக்கின்றார், இதுதான் வருணனை:

எண்த ரும்கடை சென்ற யாமம்

இயம்பு கின்றன; ஏழையால் வண்டு தங்கிய தொங்கல் மார்பன்

மயங்கி விம்மிய வாறெலாம் கண்டு நெஞ்சு கலங்கி, அஞ்சிறை

யான காமர் துணைக்கரம் (கொண்டு தம்வயிறு) எற்றி எற்றி

விழிப்பு போன்றன கோழியே’ (எண் தரும் - எண்ணப்படுகின்ற: யாமம் - (கடை) யாமம்; ஏழை - கைகேயி: தொங்கல் - மாலை; மயங்கி - மதி மயங்கி; விம்மிய புலம்பிய; அம் சிறை - அழகிய சிறகு; காமர் - அழகிய; துணைகரம் - இரண்டு கைகள்: எற்றி எற்றி - பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப போன்றன - அழுவனவொத்தன.)

கடையாமத்தில் கோழிகள் கூவுகின்றன. கோழிகள் கூவும் போது இறக்கைகளை வயிற்றில் அடித்துக் கொள்வனபோல்

2. மேற்படி மேற்படி. 47.