பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நினைவுக் குமிழிகள்-2

தையல் துயர்க்குத் தரியாது தன் சிறகாம்

கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் வெய்யோனை

வாவுபரித் தேர்ஏறி வாவென் றழைப்பதுபோல்

கூவினவே கோழிக் குலம்’

|தையல்-பெண்: வெய்யோன்-பகலவன்; வாவுபரி

தாவும்.குதிரை). இப்பாடலைப் பன்முறை பாடிப் பாடிக் கேட்போரை அநுபவிக்கச் செய்வார். இரவு பூராவும் துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் நளன்-தமயந்தியைக் கானும் நாமும் துன்பத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். இத்துன்பத்திற்கு விடுதலை வருவது போல் கதிரவன் தோன்றுகின்றான். கோழிக்குலம் அவனை விரைவில் வருமாறு கூவி அழைக்கின்றது. இரண்டிலும் சூழ்நிலைகளை விளக்கி விடியலை ஒப்பிட்டுக் காட்டும்போது சொற்பொழிவைக் கேட்போர் எல்லையற்ற இலக்கிய இன்பத்தில் திளைக்கின்றார்கள். இச்சொற்பொழிவை அநுபவித்தது இக்குமிழியில் வெளிப்படுகின்றது.

இலால்குடி நடேச முதலியார் கங்கை வேடனும், காளத்தி வேடனும் என்ற தலைப்பில் குகப் பெருமானையும் கண்ணப்ப நாயனாரையும் ஒப்பிட்டுக் காட்டி மாணாக்கர் களை மகிழ்வித்ததும் இலக்கிய இன்பம்’ என்ற தலைப்பில் பேசி மாணாக்கர்களை இலக்கிய இன்பத்தில் திளைக்க வைத்தது இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. சி. இலக்குவனார் (அப்பொழுது திருவையாற்று அரசர் தமிழ்க் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், மாணவர் உலகத்தில் மிகப் புகழுடன் திகழ்ந்தார். அவரை ஒரு சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்திருந்தேன். அவர் "இளைஞர் எழுச்சி என்ற தலைப்பில் பேசினார். இளைஞர் கள் மிக்க அடக்கத்துடன் இருந்து கல்விகற்றுப் பெருமை

4, o வளவெண்பா 283