பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நினைவுக் குமிழிகள்-2

கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் கோட்டமில் மனத்தின் நூல் உளங்கொளக்

கொடுத்தல் என்ப." என்று கூறுவர். இந்த முறையை நான் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபோது ஆங்கிலத்தில் படித்தேன். தலைமையாசிரியர் பொறுப்பு வந்தபொழுது இக்கருத்துகளை நடைமுறைப் படுத்தவும் முயன்றுள்ளேன். நாயுடு அவர்களும் விருந்து அளித்தார்கள். இவரையும் துறையூருக்கு வந்து ஒரு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுமாறு வேண்டினேன். ஏதோ ஆழ்வார் களைப் பற்றிப் பேசியதாக நினைவு. இவர் உயர்நிலைப் பள்ளி மாணவர் நிலைக்கு இறங்கிப் பேச முடியாமையை அறிந்தேன்.

பாவேந்தர் பள்ளியில் மாணாக்கர்கட்கேற்றவாறு சுவை யுடன் பேசினார். கவிதை இயற்றுவதில் பல அநுபவங் களைச் சுவையுடன் எடுத்துக்காட்டிக் கேட்போரை அது பவிக்கச் செய்தார். அக்காலத்தில் (1940-50) பாரதியார் போன்றவர்களின் தற்காலக் கவிதைகளைப் புலவர்கள் அதிகமாக மதிப்பதில்லை. பெரும்பான்மையான புலவர்கள் பத்தாம் பசவிகளாக இருந்தனர். பண்டைய இலக்கியங்கள், பிற்காலக் காவியங்கள், சிற்றிலக்கியங்கள்-இவைதாம் கவிதைகள் என்று எண்ணியிருந்தனர். கிணற்றுத் தவளை களாக இருந்தவர்கள் குளத்தையும் பார்க்க முடியவில்லை: ஏரிக்கும் வரமுடியவில்லை. கடலுக்கு இவர்கள் எப்படி வரப்போகின்றார்கள்? இந்தக் குறையைப் பாவேந்தர் தாகுக்காக எடுத்துக் காட்டினார். அவர் குறிப்பிட்ட நிகழ்ச்சி யொன்று இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது.

ஒரு சமயம் பாண்டிச்சேரியில் ஒரு பெரிய இலக்கியக் கூட்டம் நடைபெற்றதாம். யாரோ ஒரு பெரும் புலவர்

3. நன்னூல்-நூற்பா. 35.