பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix

நூல் துறையூரில் ஒன்பதாண்டுகள் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாகப் பணியாற்றியபோது அமைந்த வாழ்க்கை குமிழிகளாக அமைந்திருப்பது. இந்த நூல் வெளிவருவதற்குச் சிறிது நிதி உதவிய தமிழக அரசுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின்மூலம் என் இதயங் கனிந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய திரு. ஆ. பன்னீர்

செல்வம் 16 ஆண்டுகனாக நெருங்கிப் பழகிய நண்பர். உடன்

பிறப்பில்லா உடம்புபாழ்' என்ற பழமொழி உடன்பிறப் பின்றி ஒரேமகனாகப் பிறந்த அடியேனுக்குப் பல அன்பர்கள் இறையருளால் தம்பிகளாக அமைந்து எனக்கு ஆன்மிகப் பலத்தைத் தந்து கொண்டுள்ளனர். 'தம்பியுடையான் பகை(டை)க்கு அஞ்சான்’ என் பொன்மொழிக்கு இலக்கண மாக அமைந்து நேர்மையான ஆதரவாளராக (Moral supporters) இருந்து வருகின்றனர் என்றாலும் திருப்பதியி விருந்துபோது அங்குத் தமிழ் வளர்க்கவும் (பல்கலைக் கழகத்தில்) ஒய்வுபெற்றபிறகு (அக்டோபர் 24, 1977) சென்னையில் குடியேறிய நாள்முதல் (14-1-1978) அரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒல்லும் வகையெல்லாம் என் சொந்த முயற்சியால் தமிழ் வளர்க்கவும் உதவி புரிந்து வருவது என் தமிழ்ப் பணிக்கு ஊக்கம் தந்து கொண்டிருப்பதை என்றும் மறக்காமல் போற்றத் தகுந்த செயலாகும். -

பெரும்பாலான அரசு ஊழியர்கள் தம்மை எசமானர் கள் என்று கருதிப் பொதுமக்களுக்கு உதவியாக இருப்ப தில்லை என்பது கண்கூடு. எனினும், பாலைவனத்திலும் இடைச்சோலை (Oasis; போல், அப்பர் சுவாமிகள் மரபில் வந்தவர்களாகச் சிலர் என் கடன்பணி செய்து கிடப்பதே என்ற மனப்பான்மையுடையவர்களாக இருப் பதைக் காணாமல் இல்லை. நம்மாழ்வார் வேறோர் நோக்கத்தில், -

தொண்டே செய்து என்றும்

தொழுது வழியொழுக பண்டே பரமன்

பணித்த பணிவகையே" என்று கூறியிருந்தாலும் இவர்கள் தம்மைச் சமூகத் தொண்டர்க்ளாகக் கருதுபவர்கள், சமூகம் தமது வரிப்

5. திருவாய் 10.4:5