பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியில் சிறப்புச் சொற்பொறிவுகள் 185

(பெயர் சொன்னார்: நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை) பேச்சில் இடைப்பிறவரலாக, "இக்காலத்தில் கவிஞர்கள் என்று தாமே விலாசம் போட்டுக் கொள்பவர்கள் என்ன பாடு கின்றார்கள்? இவர்கள் பாடுவதும் பாட்டா? வெள்ளைக் காரப் பணம் சின்னப்பணம், வேடிக்கைப் பார்க்குதாம் வெள்ளிப்பணம்' என்று வெள்ளைப்பாட்டுதான் பாடுவார் கள். இவற்றில் கருத்தும் இருக்காது; தமிழும் இருக்காது” என்று பேசினாராம். நம் மக்கள்தாம் இருக்கின்றார்களே, கைதட்டுவதற்கு? யாரோ ஒரு சிலர் எதற்காகவோ கை தட்ட, கூட்டத்தில் பெரும்பாலோர் செம்மறி ஆட்டு மனப் பான்மையுடன் கைதட்டி விடுவார்கள். அக்கூட்டத்திற் பாரதிதாசனும் போயிருந்தாராம். எங்கோ ஒரு மூலையில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தாராம்.

மக்கள் கைதட்டலைக் கேட்டவர் மனம் பொறுக்காமல் கூட்டத் தலைவருக்கு எனக்குப் பத்து மணித்துளிகள் பேச அநுமதி அளிக்க வேண்டுகிறேன்-பாரதிதாசன்” என்ற சீட்டை அனுப்பினாராம். கூட்டத் தலைவர் இவரை அநுமதித்தால் ஏதாவது குழப்பம் நேரிடும் என்று அஞ்சி அநுமதிக்க மறுத்து விட்டாராம் . "எங்கள் பாரதி தாசனைப் பேசவிடாவிட்டால் நாங்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெற அநுமதியோம்” என்ற கூக்குரல் எழுப்பி பெரும் > பாலோர் எழுந்து விட்டனராம். கூட்டத் தலைவர் பின்ன; அநுமதி அளித்தாராம். பாவேந்தர் பேசியது, "எங்கள் வீடு ஈசுவரன் கோயில் அருகில் உள்ளது. ஒருநாள் சிறுவன் ஒருவன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். பட்டத்திற்கு "வால் போதாததால் அது சரியாகப் பறக்கவில்லை. உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. அந்தக் காலத்தில் அரைக்கால் சட்டையெல்லாம் அதிகமாக இல்லை. அச்சிறுவன் கோவணம்தான் கட்டியிருந்தான். தன் கோவணத்தை அவிழ்த்து அதை இரண்டு மூன்றாக நீட்ட