பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவுகள் 187

பிள்ளை' என்று போட்டுக் கொண்டு தானும் ஒரு சாதனை புரிந்து விட்டதாகத் தமக்குள்ளே மகிழ்வார். பெரும் புலவர் படைத்த நூலில் தமது பெயரும் சேர்ந்து விட்டதைக் கண்டு மகிழ்வார். இவர் மகிழ்ச்சி எப்படிப்பட்டது? பட்டம் விட்ட சிறுவன் தனது கோவணம்ஈசுவரன்கோயில் தங்கக் கலசத்தில் சுற்றிக் கொண்டதால் பெற்ற மகிழ்ச்சிபோன்றது' என்று சொல்லி முடித்தாராம் பலத்த கைத்தட்டல் கிடைத்ததாம். முன்னர் தட்டப்பெற்ற கைத்தட்டலைப்போல் பன்மடங்கு ஒலித்ததாம். தலைவருக்கும் பேச்சாளருக்கும் முகத்தில் ஈ ஆட வில்லையாம். நகைச்சுவைமிக்க இந்த நிகழ்ச்சியைத் துறை யூரில் மாணவர்கள், பொதுமக்கள் நடுவே அவிழ்த்துவிட்டு இங்கும் கைதட்டலைப் ப்ெற்றார்.

அந்தக் காலத்தில் 'காலசக்கரம் என்ற ஒரு திங்கள் ஏடு கோவையிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் பெரிய சாமித் தூரன் என்பதாக நினைவு. அதில் ‘செந்தமிழ்த்தீனி’ என்ற தலைப்பில் கட்டுரையொன்று வரைந்திருந்தேன். இந்தக் கட்டுரையின் கரு பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற கவிதை நூலிலிருந்து எடுக்கப்பெற்ற,

கட்டுக்குள் அடங்கா தாடிக் களித்திடும் தனது செல்வச் சிட்டுக்கள் சுவடிக் குள்ளே செந்தமிழ்த் தீனி உண்ண விட்டுப்பின் அடுக்க ளைக்குள் அமுதத்தை விளைவு செய்தாள்." என்ற பகுதிதான். இக்கட்டுரையின் சில பகுதிகள் :

'மாலை வேளை, ஒரு சிறிய முற்றம். முற்றத்தில் கோழிக் குஞ்சுகட்கும் புறாக்குஞ்சுகட்கும் தீனி போடப்படு

7. கவிஞன் உள்ளம் (1949) என்ற என் முதல் நூலில்

இறுதிக் கட்டுரையாகச் சேர்ந்துள்ளது.