பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி விழாக்கள் 189

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கவிஞர் உள்ளத்தில் ஒன்று சேர்ந்து ஒரு கவிதையாக (மேற்காட்டியது) உருவெடுக் கின்றது. சிட்டுகளுக்குத் தீனியிட்ட சேடியின் செயலும், பிள்ளைகட்குச் செந்தமிழ்த் தீனியிட்ட குடும்பத் தலைவியின் செயலும் ஒன்று சேர்ந்து பாலொடு தேன் கலந்தீது போல்’ சுவை மிகுந்து ஒர் அழகான சொல்லோவியமாக வெளிப்படு கின்றது”.

பாவேந்தர் இந்தக் கட்டுரையைக் கண்டு மகிழ்ந்தார். "ரெட்டியார் ஐயா, நான் கவிதையை எழுதும்போதுகூட இப்படியெல்லாம் நினைக்கவில்லை. கவிதையின் உயிரைக் கண்டு விட்டீர்கள்; கவிஞனின் உள்ளத்தையும் கண்டு விட்டீர் கள்!” என்று சொல்லிக்கொண்டே என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். மாலை நேரங்களில் நடையிலேயே பல இடங் கட்குச் சென்று வருவோம். பல பொருள்களைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்வோம். சமுதாய சீர்திருத்தம் பற்றிப் பல திட்டங்களைச் சொல்வார். அவையெல்லாம் பயங்கர மானவை; நம் நாட்டுச் சூழலுக்குச் சிறிதும் ஒவ்வாதவை: பொதுவுடைமைப் போக்குடையவை. அவற்றை ஈண்டு எடுத்துக் காட்டக்கூட என் கை கூசுகின்றது.

குமிழி-90 26. பள்ளி விழாக்கள்

புதிதாகத் தொடங்கப்பெற்ற பள்ளியாதலால் விழாக் களை நடத்துவதற்குத் தகுந்த இடவசதி இல்லை. ஏதோ அப்போதைய ஏற்பாடுகளாகக் கொட்டகைகள் போட்டுக் கொண்டு இவ்விழாக்களை நடத்த வேண்டியதாயிற்று. வகுப்புகளில் மாணாக்கர் இலக்கியக்கழகங்களில் சிறுஅளருல் உள்ளுர்ப் பெரியார்களின் தலைமையில் நடத்தப்பெறும்