பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நினைவுக் குமிழிகள்-2

சிறு விழாக்களைத் தவிர, மிகப்பெரிய அளவில் நடத்தப் பெறும் விழாக்கள் இரண்டு. ஒன்று, விளையாட்டுகள் பற்றிய விழா. இரண்டு, பள்ளியில் ஆண்டுக்கொருமுறை நடத்தப்பெறும் பெருவிழா.

விள்ையாட்டுகள் பற்றிய விழா : இவ் விழா நடைபெறுவதற்கு ஒய். எம். சி. ஏ. உடற்பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற உடற் பயிற்சிக் ஆசிரியர் தேவை. இவர் உற்சாகமுள்ள இளைஞர்களாக வாய்த்து விட்டால் பருத்தி புடவையாகக் காய்த்த மாதிரி தான். நான் துறையூரில் பணியாற்றிய போது இத்தகைய ஆசிரியர்கள் கிடைக்கவே இல்லை. தொடக்கத்தில் ஒய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்களை (Drill masters) நியமிக்க வேண்டியதாயிற்று. இவர்கட்கு உடற்பயிற்சியில் அநுபவம் உண்டே தவிர, பூப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து, (Football), alsneruluiös (Ring tennis) Gurrait p estewar யாட்டுகளில் ஆர்வம் அதிகம் இருப்பதில்லை. ஒட்டப் பந்தயங்கள், குண்டெறிதல், பல்வேறு வகைத் தாண்டல்கள் போன்ற விளையாட்டுகளை நடத்துவதில் பழக்கமும் இல்லை: பயிற்சியும் இல்லை. அருகிலுள்ள பெரம்பலூர், இலால்குடி, முசிறி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஒய்.எம்.சி.ஏ.யில் பயிற்சி பெற்ற உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர்களைத் துணைகொண்டு பல விளையாட்டுகளில் பயிற்சி தரப்பெற்றது. இவர்கள் மூலம் கருத்துகளைப் பெற்று ஒய்வுபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்களைக்கொண்டே அசுவமேதயாகம் செய்தது இன்றும் என் மனத்தில் பசுமை யாகவே உள்ளது. ஒய்வுபெற்ற ஆசிரியர்களாகப் பணி யாற்றியவர்கள் இரண்டு ராவ்ஜிக்கள் மாத்துவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் இரண்டாண்டுகள் பணியாற்றிய தாக நினைவு. இவர்களைத் தவிர போர்த்துறையில் பணி யாற்றித் திரும்பிய கிருட்டினசாமி என்ற இளைஞர் ஒருவர் ஓராண்டு பணியாற்றினார். இவர்கள் காலத்தில் பெரம்பலூ